ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாளை 11 மணிக்குள் ரிசல்ட் – சந்தீப் சக்சேனா
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவுகள் நாளை காலை 11 மணிக்குள் அறிவிக்கப்பட்டு விடும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 74.4 சதவீத வாக்குகள் பதிவாகியது. 230 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு ராணிமேரி கல்லூரியில் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அந்த அறைக்கு வெளியே துணை ராணுவ படையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
5 அடுக்கு பாதுகாப்பு
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணிமேரி கல்லூரியில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் மத்திய துணை ராணுவ படையினர் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மற்ற இரண்டு அடுக்குகளில் ஆயுதப்படை போலீசாரும், மற்ற இரண்டு அடுக்குகளில் சென்னை மாநகர போலீசாரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
17 சுற்றுகள் எண்ணிக்கை
வாக்கு எண்ணும் மையத்தில் செவ்வாய்கிழமை வாக்குகள் எண்ணுவதற்கு வசதியாக 14 மேஜைகள் போடப்பட உள்ளன. பதிவான வாக்குகள் மொத்தம் 17 சுற்றுகளாக எண்ணப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் வாக்கு எண்ணும் அலுவலர்களுடன் ஒரு நுண் பார்வையாளர், ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர் என கூடுதலாக 3 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.

11மணிக்கு முடிவுகள்
காலை 9 மணிக்கு முன்னணி நிலவரமும், 11 மணிக்கு இறுதி நிலவரமும் தெரியவரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
முகவர்களுக்கு மட்டும் அனுமதி
வாக்கு எண்ணும் மையத்திற்குள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அங்கீகார அடையாள அட்டை உள்ளவர்களும், வேட்பாளர்களின் முகவர்களும் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். காலை 7.30 மணிக்குள் அவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வந்து விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications