ஜெயக்குமாரை சாடும் மதுசூதனன் - அம்பலத்திற்கு வந்த ஒபிஎஸ் - ஈபிஎஸ் உள்ளடி சண்டை
அமைச்சர் ஜெயக்குமார் கட்சி தலைமையின் அனுமதியின்றி தான்தோன்றி தனமாக செயல்பட்டு வருகிறார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மதுசூதனன் கூறியுள்ளார்.
சென்னை: கட்சியில் மூத்த உறுப்பினர்கள் இருந்தால் தான் செல்லாக்காசாக ஆகி விடுவோம் என்ற பயத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கட்சி தலைமையின் அனுமதியின்றி தான்தோன்றி தனமாக செயல்பட்டு வருகிறார் என்று மதுசூதனன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஒபிஎஸ் ஆதரவாளராக இருந்த மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுக அம்மா அணி வேட்பாளராக போட்டியிட்டார் டிடிவி தினகரன். பணப்பட்டுவாடா புகாரினால் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது.
இதனிடையே பிளவுபட்டிருந்த இரு அணிகளும் இணைந்தன. ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் இணைந்தாலும் இரு அணியின் ஆதரவாளர்களும் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டி ஒட்டாமலேயே வலம் வருகின்றனர். இரு அணிகளும் இணைந்து இடைத்தேர்தலை சந்திக்க உள்ளதால் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த மதுசூதனன் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆதரவாளர்கள் மோதல்
ஈபிஎஸ் அணியில் உள்ள ஜெயக்குமார் முட்டுக்கட்டை போடுகிறார். இது மதுசூதனனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே பனிப்போர் நிலவுவதாக கூறப்படும் நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இந்த மோதலை அம்பலப்படுத்தியுள்ளது.

மீனவர் வேட்பாளர்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், ஜெயக்குமாரை கடுமையாக சாடினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று ஜெயக்குமார் கூறுகிறார். ஆனால் அதுபோன்று இதுவரை நடந்ததில்லை.

ஜெயக்குமார் முட்டுக்கட்டை
1996ஆம் ஆண்டு முதல் என்னுடைய அரசியல் பயணத்துக்கு ஜெயக்குமார் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். நான் போட்டியிட்டு ஜெயித்து எம்எல்ஏவாகிவிட்டால் அவர் செல்லாக்காசாகி விடுவோம் என்று நினைக்கிறார்.

ஜெயக்குமார் மீது நடவடிக்கை
மீனவ மக்கள் மீது அக்கறை உள்ளது போல் காட்டிக்கொள்ளும் அவர் இதுவரை மீனவ மக்கள் முன்னேற்றத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்
தினகரன் எதையோ மனதில் வைத்துக்கொண்டு காய் நகர்த்தி வருகிறார். அது என்னவென்று தெரியவில்லை. அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார் மதுசூதனன். ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே மனக்கசப்பு இல்லை என்று கூறிவரும் நிலையில் இருவரின் ஆதரவாளர்களுக்கு இடையேயான பஞ்சாயத்தால் அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் அம்பலத்திற்கு வந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications