For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து அறிவிப்பு முதல் மீண்டும் தேர்தல் அறிவிப்பு வரை நடந்தது என்ன? ரீவைண்ட்

கடந்த ஏப்ரல் முதல் இன்று வரை ஆர்கே நகர் தொடர்பாக நடந்த நிகழ்வுகளின் சிறு தொகுப்பு.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து முதல் இன்று வரை நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு:

  • ஏப்ரல் 10: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து- ரத்துக்கான காரணம் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை
  • ஏப்ரல் 10: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்துக்கு அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா வரவேற்பு
  • ஏப்ரல் 11: ஆர்.கே.நகர் தேர்தல் வன்முறை தொடர்பாக முதல்வர் ஓபிஎஸ் மகனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை
  • ஜூன் 6: ஆர்.கே. நகர் தொகுதிக்கு உடனடியாக தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • ஜூன் 18: ஆர்.கே. நகரில் வாக்காளர்களை விலை பேசிய எடப்பாடி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய ஸ்டாலின் கோரிக்கை
  • ஜூன் 30: ஆர்.கே.நகரில் சாதகமான சூழல் நிலவினால் இடைத்தெரெதல் நடத்தபப்டும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி விளக்கம்
  • செப்டம்பர் 6: ஆர்.கே.நகரில் தேர்தலை உடனே நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
  • செப்டம்பர் 18: ஆர்கே நகரில் டிசம்பர் 31-க்குள் தேர்தல் நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் நம்பிக்கை
  • செப்டம்பர் 22: ஆர்கே நகர் தொகுதி பணப்பட்டுவாடா வழக்கை சிபிஐக்கு மாற்ற ஸ்டாலின் கோரிக்கை
  • அக்டோபர் 12: ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிச.31க்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • அக்டோபர் 15: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என டிடிவி தினகரன் அறிவிப்பு
  • அக்டோபர் 15: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுகவுக்கு ம.ம.க. ஆதரவ என ஜவாஹிருல்லா தகவல்
  • அக்டோபர் 17: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கலைக்கோட்டு உதயம் மீண்டும் ஆர்கே நகரில் போட்டி என சீமான் அறிவிப்பு
  • அக்டோபர் 19: ஆர்கே நகரில் போட்டியிட்டு வெல்வேன் என்றார் தீபா
  • அக்டோபர் 22: ஆர்கே நகர் தொகுதியில் 40,000 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
  • அக்டோபர் 25: ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிக்கவில்லை.
  • அக்டோபர் 27: டிசம்பருக்குள் ஆர்கே நகர் தொகுதி தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி.
  • நவம்பர் 20: ஆர்கே நகர் தொகுதி வழக்குகளை விரைந்து முடிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வழக்கு
  • நவம்பர் 21: தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 31-க்குள் ஆர்கே நகர் தொகுதி தேர்தலை நடத்த உத்தரவு
  • நவம்பர் 23: அதிமுகவின் மதுசூதனன் அணிக்கே இரட்டை இலை சின்னம் என தேர்தல் ஆணையம் தீர்ப்பு.
  • நவம்பர் 24: ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ந் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
English summary
Here are the Time-line of RK Nagar By election issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X