ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு - 127 பேர் மனு தாக்கல்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 3 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று முக்கிய வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று 3 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று டிடிவி தினகரன், மதுசூதனன், தீபா, கங்கை அமரன், சமக வேட்பாளர் என படுபரபரப்பாக தேர்தல் அலுவலகம் காணப்பட்டது. இடைத்தேர்தலுக்க 127 பேர் வரை மனுதாக்கல் செய்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 16ஆம் தேதி தொடங்கியது.

திமுக, அதிமுக சசிகலா அணி, அதிமுக ஓபிஎஸ் அணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, என ஆர்.கே. நகரில் பலமுனை போட்டி நிலவுகிறது. ஆர்.கே.நகரில் போட்டியிட நேற்று வரை 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
கடைசி நாளான இன்று ஓ.பி.எஸ் அணியின் மதுசூதனன், சசிகலா அணியின் டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் கங்கை அமரன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிறுவனர் தீபா, சமக வேட்பாளர் அந்தோனி சேவியர் ஆகியோர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதுவரை 127 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை திருப்பப் பெற 27 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கப்படும்.
ஏப்ரல் 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 15ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications