கனமழையால் தாம்பரம் - ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது !
சென்னை: சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் சென்னை மாநகரத்தை பிற தென் மாவட்டங்களுடன் இணைக்கும் சென்னை - திருச்சி, கிராண்ட் சதர்ன் டிரங் (ஜி.எஸ்.டி.) சாலை ஆறாக மாறிவிட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், ஏற்கெனவே நிரம்பியுள்ள ஏரிகள், குளங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் கிராண்ட் சதர்ன் டிரங் (ஜி.எஸ்.டி.) சாலை வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் போக்குவரத்து முழுவதுமாக ஸ்தம்பித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நகர முடியாத அளவிற்கு சிக்கித் தவித்து வருகின்றனர்.
சென்னை- தாம்பரம் இடையே இச்சாலையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை நோக்கி வரும் பேருந்துகள் அனைத்தும் செங்கல்பட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர்ந்து பேருந்துகளை இயக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் மீண்டும் மழை மிரட்டி வருவதால் சென்னை வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications