மரக்காணம் அருகே குடிசைக்கு தீ வைப்பு.. ஈசிஆர் சாலையில் மறியல்.. 4 கி.மீ. தூரத்துக்கு வாகனத் தேக்கம்
மரக்காணம் அருகே குடிசைக்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து ஈசிஆர் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மரக்காணம் அருகே குடிசைக்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து ஈசிஆர் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மரக்காணத்தைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது குடிசை இன்று தீவைத்து கொளுத்தப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வேளாங்கண்ணி, மற்றும் அவரது உறவினர்கள், பொதுமக்கள் ஆகியோர் வீட்டை கொளுத்தியவர்களை கைது செய்ய கோரினர். இதையடுத்து ஈசிஆர் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் மறியலால் 4 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications