காரைக்குடி பள்ளியில் ரோட்டரி- இன்ட்ராக்ட் கிளப் தொடக்க விழா
காரைக்குடியில் இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ரோட்டரி - இன்ட்ராக்ட் கிளப் தொடக்க விழாசிறப்பாக நடைபெற்றது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று(06.09.2017)ரோட்டரி - இன்ட்ராக்ட் கிளப் தொடக்க விழாசிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்குகாரைக்குடி ரோட்டரி பேர்ல் சங்கமம் தலைவர் திரு. நாச்சியப்பன் அவர்கள் தலைமை ஏற்றார். தலைமையாசிரியர் திரு. ஆ. பீட்டர் ராஜா அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில்அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத்துறையின் தலைவர் முனைவர். வி.மாணிக்கவாசகம் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார்.

மாணவர்கள் பதவியேற்பு
இவ்விழாவில், ஒன்பதாம் வகுப்பு மாணவர் ச. ஆரோக்கிய கிறிஸ்டோபர் தலைவராகவும், ஒன்பதாம் வகுப்பு மாணவன் முகிலன் செயலராகவும், பா. சண்முகேஸ்வரன் பொருளாளராகவும் பதவி ஏற்றனர். இவர்களுக்கு முனைவர். வி. மாணிக்கவாசகம் அவர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

வாழ்த்துரை
மேலும் எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 25பேர் உறுப்பினர்களாக பதவியேற்றனர். காரைக்குடி ரோட்டரி பேர்ல் சங்கம் துணை ஆளுநர் திரு. சி. மைக்கேல் சகாய அன்பு அவர்கள், தலைமைஆசிரியர் திரு.பீட்டர் ராஜா அவர்கள், பட்டதாரி ஆசிரியர் திருமதி.மீனாட்சி அவர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி.அழகுசுந்தரி அவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு தலைவர் திரு.சகாயசெல்வன்அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

சங்கத்தின் நோக்கம்
இந்நிகழ்வில் பதவியேற்று கொண்ட மாணவர்கள்,இச்சங்கத்தை சிறப்பாக செயல்படுத்துவோம் என்று உறுதியெடுத்துக் கொண்டனர். முனைவர். வி. மாணிக்கவாசகம் அவர்கள் தனது சிறப்புரையில், இக்கிளப்பின் நோக்கம் குறித்தும், அதன் சிறப்பு குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

பெற்றோர்கள் உற்சாகம்
இவ்விழாவில் பெற்றோர்களும் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர். விழாவின் இறுதியாக ரோட்டரி - இன்ட்ராக்ட் கிளப் பொருளாளர் பா.சண்முகேஷ்வரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பட்டதாரி ஆசிரியர் திருமதி.கீதா சுந்தரேஸ்வரி அவர்கள் தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் திரு. முத்துவேல்ராஜன் அவர்கள் மற்றும் திரு. விஜயகாந்தி அவர்கள் செய்திருந்தார்கள்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications