ஆர்.கே. நகர் தொகுதியில் கருப்பு பண புழக்கமா?...தகவல் அளிக்க 24 மணி நேர மையம் தொடக்கம்!!!
சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், கறுப்புப் பண புழக்கத்தைத் தடுக்க, 24 மணி நேரமும் இயங்கும் மையத்தை, வருமான வரித்துறை துவக்கி உள்ளது.
இதுகுறித்து, சென்னை வருமான வரி கூடுதல் இயக்குனர் முரளி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...

ஆர்.கே.நகரில் நடக்கும் இடைத்தேர்தல், பண புழக்கமின்றி, நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தலின் போது, கறுப்புப் பண புழக்கத்தைத் தடுக்க, தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வருமான வரித் துறையை, தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து, கறுப்புப் பண புழக்கத்தைத் தடுக்க, 24 மணி நேரமும் செயல்படும் மையம் துவங்கப்பட்டு உள்ளது. கறுப்புப் பண நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், இணையதளம் மற்றும் தொலைபேசி வாயிலாக, இம்மையத்திற்கு தகவல் அளிக்கலாம்.
தகவல் அளிப்பவர்கள் பற்றிய விவரம், ரகசியமாக வைக்கப்படும். மையத்தை, 1800 425 6669 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 044-2827 1907 என்ற எண்ணுக்கு, தகவலை பேக்ஸ் மூலமும் அனுப்பலாம். இணையதளம் மூலம் தகவல் அளிக்க, [email protected] என்ற முகவரியை பயன்படுத்தலாம்.
இவ்வாறு, சென்னை வருமான வரி கூடுதல் இயக்குனர் முரளி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications