18 மாதங்களுக்கு பின் கொடநாட்டில் ஜெ... சிவப்பு கம்பளம் விரித்து உற்சாக வரவேற்பு
உதகமண்டலம்: 18 மாதங்களுக்குப் பின்னர் கொடநாடு வருகை தந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க.வினர் சிவப்பு கம்பளம் விரித்து மலர்தூவி பிரம்மாண்டமான உற்சாக வரவேற்பளித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் கோவைக்கு பகல் 12.20 மணிக்கு வந்தார். அங்கு தமிழக அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, எம்.எஸ்.எம் ஆனந்தன் உள்ளிட்டோர் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவுடன், தோழி சசிகலா, செயலாளர் ராமலிங்கம், பி.ஏ. பூங்குன்றன், பாதுகாப்பு அதிகாரிகள் பெருமாள்சாமி, ராஜா உள்ளிட்டோரும் வந்தனர்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் மூலம் பகல் 12.50 மணியளவில் கோவை விமான நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் கொடநாட்டுக்குப் புறப்பட்டனர்.
உதகையில் உள்ள கர்சன் எஸ்டேட் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி ஈளாடா வழியாக கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு பிற்பகல் 1.45 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா சென்றடைந்தார்.
அவரை வரவேற்க அலங்கார தோரணங்கள், வரவேற்பு வளைவுகள் என பிரம்மாண்ட ஏற்பாடுகளை அண்ணா தி.மு.க.வினர் செய்திருந்தனர். சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து ஜெயலலிதாவுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
18 மாதங்களுக்கு பிறகு கொடநாடு வந்த ஜெயலலிதாவின் கார் மீது இரு புறங்களிலும் நின்ற தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.
-
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications