தேர்தல்.. ரவுடிகள் தீவிர கண்காணிப்பு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்ட ரவுடிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். ரவுடிகள், குற்ற பின்னணி உடையவர்கள், திருடர்கள் பற்றிய விபரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர். மேலும் தேர்தல் நேரத்தில் அசம்பாவிதத்தில் ஈடுபடுபவர்கள், கலவரம் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்கள் குறித்த தகவல்களை சேரிக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்டத்தில் மட்டும் 1000 பேருக்கும் மேலானோர் இடம் பெறறுள்ளனர்.

அவர்களில் பலர் தற்போது பல்வேறு வழக்குகளில் சிறையில் உள்ளனர். இவர்களது தற்போதைய நடவடிக்கை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். பயங்கர ரவுடிகள், வன்முறையில் ஈடுபடுபவர்கள் என்ற அடிப்பையில் அவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உள்ளே இருப்பவர்கள் தவிர வெளியே இருப்பவர்கள் மீது முன்னெச்சரிக்கையாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு ஆர்டிஓக்கள் முன்னிலையில் விசாரணை நடத்தி அவர்களிடம் உறுதி மொழி எழுதி வாங்கப்பட்டு எச்சரித்து அனுப்பப்படுகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் முன்னாள் ரவுடிகள், இன்னாள் ரவுடிகள் கிலியில் உள்ளனர். மேலும் தேர்தல் விதிமுறை படி மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்ற 513 பேர் துப்பாக்கிகளை போலீசில் ஓப்படைத்து்ள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+