உட்லண்ட்ஸ் திரையரங்கில் ரவுடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் தப்பியோட்டம்.. போலீசார் வலைவீ
சென்னையில் உட்லண்ட்ஸ் திரையரங்கில் பிரபல ரவுடியை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது. அவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் ரவுடி பாலகிருஷ்ணன் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
சென்னை திருவான்மியூர் வள்ளுவர் தெருவில் பாலகிருஷ்ணன் என்ற ரவுடி வசித்து வருகிறார். இவர் மீது கஞ்சா வழக்குகள் பல ஏற்கனவே உள்ளது. பல அடிதடி வழக்குகளும் உள்ளன. திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி முருகனுக்கும் இவருக்கும் தொழில் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கத்திற்கு திரைப்படம் பார்க்க பாலகிருஷ்ணன் சென்றுள்ளார். இவரை நோட்டமிட்டவாறே திரையரங்கத்திற்கு 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்துள்ளது.
இது தெரியாமல் திரையரங்க வளாகத்தில் பாலகிருஷ்ணன் நின்று கொண்டிருந்த போது அந்த மர்ம கும்பல் அவரை திடீரென தாக்கியது. நிலைகுலைந்த ரவுடி பாலகிருஷ்ணனை மர்ம கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.
படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications