சென்னை ரிசர்வ் வங்கிக்கு போனால் சில்லறை கிடைக்கும்... ரூ. 10, 50 நோட்டுகள் நாணயமும் பெறலாம்
சில்லறை இல்லாமல் அவதிப்படும் மக்கள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு போனால் ரூ.10 மற்றும் 50 நோட்டுகள், 5 ரூபாய் நாணயம் பெறலாம்.
சென்னை: சில்லறைத் தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டுள்ளதால் சென்னை ரிசர்வ் வங்கியில் பழைய நோட்டை மாற்றுபவர்களுக்கு 10 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் 500 மதிப்பில் 5 ரூபாய் நாணயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த 6 நாட்களாக கையில் பணம் இல்லாமலும், இருக்கும் பணத்தை மாற்ற முடியாமலும், மாற்றிய பணத்தை செலவு செய்ய முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடி 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற அறவிப்பு மக்களை ஒரு வித செயலற்ற தன்மை கொண்டு சென்றுள்ளது.

10ம் தேதியில் இருந்து மக்கள் வங்கிகளுக்கு சென்று பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். வங்கிகளிலும் 2000 ரூபாய் புது நோட்டைத்தான் வழங்கி வருகின்றனவே தவிர, அன்றாட செலவுகளை செய்ய சில்லறையாக எதுவும் கொடுப்பதில்லை.
இதனால், 100 ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சின்ன, சின்ன செலவுகள் செய்வதற்கான 10 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளுக்கு மக்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன. இந்த பிரச்சனைகளை முழுவதுமாக தீரக்க முடியவில்லை. என்றாலும், சென்னை ரிசர்வ் வங்கியில் பழைய ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்வோருக்கு சில்லறைகளை வழங்கி வருகிறது.
பொதுமக்களின் சிரமத்தை குறைக்க 10 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை சென்னை ரிசர்வ் வங்கி கொடுத்து வருகிறது. மேலும் ரூ. 500 மதிப்பிற்கு 5 ரூபாய் நாணயங்கள் வழங்கப்படுகிறது. இதனால் ரிசர்வ் வங்கியில் பழைய நோட்டை மாற்ற மக்கள் அதிக அளவு கூடியுள்ளனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று மக்கள் பழைய ரூபாய் நோட்டுக்களை மக்கள் மாற்றி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications