வெள்ளத்தால் சென்னை விமான நிலையத்துக்கு ரூ.100 கோடி இழப்பு
சென்னை: பெரு மழை, வெள்ளத்தால் சென்னை விமான நிலையத்துக்கு ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் சேத விவரம் டெல்லியில் உள்ள விமான நிலைய ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமானோர் தங்கள் வீடுகளையும்,உடமைகளையும் இழந்தனர். வெள்ளம் காரணமாக சென்னை விமான நிலையமும் பாதிக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீரால் விமானனநிலைய ஓடுபாதை நீரில் மூழ்கியது.

இதுகுறித்து விமானநிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
விமான நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து 5-ம் தேதி வரை விமானநிலையம் மூடப்பட்டது. விமான நிலையத்தில் இருந்த மின்னணு சாதனங்கள், கணினி, பயணிகள் அறிவிப்புப் பலகை , ரேடார் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் செதமடைந்தன்.

டெல்லியில் உள்ள விமானநிலைய ஆணையத்துக்கு சேத விவரம் குறித்து அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சேத மதிப்பிற்காக காத்திருக்கிறோம் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications