ரூ 15 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்... பிறந்த நாளன்று திறக்க திட்டம்!
சென்னை: எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ 15 கோடியில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது.
ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஜெயலலிதா சமாதியைப் பார்ப்பதற்காகவே மாநிலம் முழுவதிலுமிருந்து தினமும் ஏராளமானோர் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஜெயலலிதா சமாதி அருகே இதுவரை ஆயிரக் கணக்கானோர் மொட்டை போட்டு 'அம்மா' மீதான பாசத்தையும் மரியாதையையும் வெளிப்படுத்தி உள்ளனர். இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தைவிட அதிகமான கூட்டம் காணப்படுகிறது.
இன்று 5 வது நாளாக ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.ஜெயலலிதா சமாதி அமைந்துள்ள இடத்தில் பெரிய நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த நினைவிடத்துக்கான மாதிரி வரை படம் தயாராகி வருகிறது.
எம்.ஜி.ஆர். நினைவிட வளாகம் மொத்தம் 8 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் பாதி இடத்தை ஜெயலலிதா நினைவிடத்துக்கு ஒதுக்கவிருக்கின்றனர்.
ஜெயலலிதா நினைவிடத்தை அமைக்க தமிழக அரசு ரூ.15 கோடி ஒதுக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாளன்று இந்த நினைவிடம் திறக்கப்பட உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications