பட்டா மாறுதலுக்கு ரூ. 15,000 லஞ்சம்.. பெரியகுளத்தில் சர்வேயர் கைது.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியகுளம்: பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி மகேஸ்வரி. மகேஸ்வரி பெயரில் ஒன்றரை சென்ட்டில் வீட்டு மனை வாங்கியுள்ளார். இதற்கு பட்டா மாறுதல் செய்யலாம் என்று எண்ணி முறைப்படி விண்ணப்ப மனுவும் அளித்திருந்தார்.

இந்த மனுவானது, பெரியகுளம் நகராட்சி நில அளவு சர்வேயராக பணிபுரியும் செல்வம் என்பவரிடம் வந்தது. இந்த மனுமீது சர்வேயர் செல்வம் விசாரணையும் நடத்தி வந்தார். அப்போது, பட்டா மாறுதல் செய்ய வேண்டுமானால் தனக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என கோவிந்தராஜிடம் சர்வேயர் கேட்டுள்ளார்.
இதற்கு ஒப்புக் கொண்ட கோவிந்தராஜூம் முதல்கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட பின்னர், தனக்கு மேலும் 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக வேண்டும் என சர்வேயர் கேட்டிருக்கிறார். அதுவும் கண்டிப்புடன் கேட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கோவிந்தராஜ், தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை கோவிந்தராஜ் மூலம் கொடுத்து சர்வேயர் செல்வத்திடம் தரும்படி சொன்னார்கள். அதன்படி கோவிந்தராஜூம் வழங்கினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சர்வேயர் செல்வத்தை கையும் களவுமாக கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications