2.5 கோடி ரூபாய் BMW கார்; தங்க ரோலக்ஸ் வாட்ச்! அப்பாவை திக்குமுக்காட வைத்த மகன்!
கோபிசெட்டிபாளையம்: தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்ட அப்பாவுக்கு மகன் ஒருவர் பிஎம்டபுள்யூ கார் ஒன்றைப் பரிசாக வழங்கி தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கோபிசெட்டிபாளையத்தில் பிரபலமான வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அங்காடியை நடத்தி வருகிறார் ஜெகந்நாதன். அவருடைய மகன் தான் பாலாசிங். இவர் தனது தந்தைக்குப் பிறந்தநாள் பரிசாக 2.கோடி மதிப்புள்ள பிஎம்டபுள்யூ காரை அளித்துள்ளார். கூடவே தங்கத்திலான ரோலக்ஸ் வாட்ச் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.

அந்தளவுக்கு அப்பா மீது பாசம் உள்ள மகனாக இருக்கிறார் இவர். கிட்டத்தட்ட 'சூரிய வம்சம்' படத்தை நேரில் பார்ப்பதைப் போல உள்ளது இந்த அப்பா, மகனின் உறவு. இந்தக் காலத்தில் பெற்றோரின் சாதனைகளை மகன்கள் மதிப்பதே இல்லை. ஆனால், அதற்கு ஒரு விதிவிலக்காக இருக்கிறார் இவர். அப்பாவுக்கு இவ்வளவு விலை மிகுந்த காரை பரிசளிக்க என்ன காரணம்? ஏன் செய்தார்? அதை பாலசிங் ஒரு யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டியில் விரிவாகப் பேசி இருக்கிறார். இந்த நெகிழ்ச்சியான பரிசு பற்றி பேசும் போது அவர்,"கடந்த 42 வருடங்களாக இந்தக் கடையை நடத்தி வருகிறோம். அதன் கிளையாக ஒரு பிரம்மாண்டமான கிளையைக் கடந்த 4 வருடங்கள் முன்பாக திறந்தோம்.
மொத்தம் 1 லட்சம் சதுர அடியில் இந்தக் கடை இயங்கிவருகிறது. அனைத்துப் பொருட்களும் தரைதளத்திலேயே கிடைக்கும். தமிழ்நாட்டிலேயே இந்தளவுக்கு தரைதளத்தில் விஸ்தாரமாக உள்ள ஒரே கடை இதுதான்" என்று சொல்லும் பாலாசிங் தமிழ்நாட்டில் உள்ள இளம் தொழிலதிபர்களில் ஒருவர். அவரது அப்பா அடிமட்டத்திலிருந்து முன்னேறி வந்தவர். எந்தளவுக்கு அடிமட்டம் என்பதை அவரது மகனே சொல்கிறார்.
"அப்பா தன்னுடைய 14 வயதில் வேலை பார்க்க ஆரம்பித்தார். பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்ததும் அந்த வேலையை அவர் தொடங்கினார். தெருத் தெருவாகப் போய் பழைய இரும்புப் பொருள்களைப் பெற்றுக்கொண்டு அதற்குப் பேரீச்சம் பழத்தை எடைக்கு தருவார். அதற்காக சைக்கிளிலேயே அவர் சுற்றினார். மிகக் கடுமையான உழைப்பாளி அவர். அப்பாவுக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம் சின்ன கிராமம். அங்கிருந்து அவர் கோபிசெட்டிபாளையத்திற்கு வந்துவிட்டார். இங்குதான் தினம் 40 கிலோ மீட்டர் வட்டாரத்தில் அவர் பழைய இரும்பு வியாபாரம் செய்தார். அவர் காலில் செருப்பு கூட இருக்காது. அந்தளவுக்கு வறுமை.
அப்படி வளர்ந்து பிறகு சின்னதாக ஒரு கடை வைத்தார். அதில் வியாபாரம் செய்துவந்தார். 15 வயதில் வியாபாரம் செய்ய ஆரம்பித்தவர் படிப்படியாக வளர்ந்து 35 வயதில் ஒரு கடை வைத்து வியாபாரம் செய்யும் அளவுக்கு முதலாளியாக மாறினார். எனது அம்மா இறந்து 22 வருடங்கள் ஆகிவிட்டன. என் 18 வயதில் அவர் இறந்தார். அதன்பின்னர் நினைத்திருந்தால் ஒரு கல்யாணம் பண்ணி இருக்கலாம்.
ஆனால், என்னையும் தங்கையையும் வளர்த்து ஆளாக்க வேண்டி 22 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்" என்று கண்கலங்கும் பாலாசிங், தனது அப்பா இளம் வயதில் செருப்பு கூட போடாமல் உழைத்த அருமையைக் கருதி விலை உயர்ந்த ஒரு செருப்பும் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ததற்காக முழுக்க முழுக்க தங்கத்திலான ரோலக்ஸ் வாட்ச் ஒன்றும் அவர் இனிமே ஹாயாக ஊரைத் தேரில் வலம் வர வேண்டி 2.5 கோடி ரூபாய் மதிப்பில் பிஎம்டபுள்யூ கார் ஒன்றையும் பிறந்தநாள் பரிசாக வழங்கி உள்ளார்.
இந்தப் பரிசு பற்றி ஜெகந்நாதன், "இந்த மாதிரி ஒரு பரிசை தருவான் என்று எனக்குத் தெரியாது. எல்லாம் ஒரு சஸ்பென்ஸ் ஆகவே இருந்தது. என் வாழ்க்கையில் இவ்வளவு விலை உள்ள ஒரு காரில் ஏறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஒரு சைக்கிள் வாங்க ஒருவருடம் உழைத்தேன். அதன் விலை 300 ரூபாய். அதை இன்னும் வைத்திருக்கிறேன். இன்று பல வசதிகள் வந்திருக்கலாம். எனக்கு முதல் சந்தோஷம் அந்த சைக்கிள்தான். இந்த ஊருக்கு நான் வந்து 52 வருடங்கள் ஆகிவிட்டன. ஒருநாளைக்கு 20 கிமீட்டர் நடந்து வியாபாரம் செய்திருக்கிறேன்.
ஒருநாள் வியாபாரம் 4 ரூபாய் 50 காசு கிடைக்கும். அதில் 3.50 செலவு போய்விடும். தினம் 1 ரூபாய் சேர்த்து வைப்பேன். அதன்பின்னர் எவ்வளவு வசதிகள் வந்துவிட்டன. என் உழைப்பில் முதல் முதலாக 4 லட்ச ரூபாய்க்கு கார் வாங்கினேன். அதை ஷோரூமில் இருந்து கொண்டு வரும் வழியில் ஒருவர் விபத்தில் அடிப்பட்டுக் கிடந்தார். அதைப் பார்த்ததும் என் மனம் தாங்கவில்லை. புது காரில் அவரை ஏற்றிக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றினேன். அவர் இப்போது பார்த்தால் கூட என்னை வாழ்த்துவார். யாரும் புது காரில் ரத்த வெள்ளத்தில் உள்ள ஒருவரை ஏற்ற மாட்டார்கள். ஒரு உயிரைவிட கார் முக்கியம் இல்லை என்பதால் நான் அதைச் செய்தேன்" என்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications