ஈரோடு கிரிக்கெட் சங்கத்தில் ரூ. 20 லட்சம் மோசடி: பரபரப்பு குற்றச்சாட்டு
ஈரோடு: ஈரோடு கிரிக்கெட் சங்கத்தில் ரூ. 20 லட்சம் மோசடி நடைபெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஈரோட்டில் கடந்த 1980ம் ஆண்டு ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் என்ற பெயரில் அமைப்பு துவங்கப்பட்டது. பின்பு தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் அங்கீகாரம் பெற்று சங்கத்தில் 27 அணிகள் உறுப்பினராக உள்ளனர். அப்போது ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராக ஸ்ரீதரும், செயலாளராக சுரேந்திரன் என்பவரும் செயல்பட்டனர்.
அடுத்து 2007ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை சங்கத்தின் செயலாளராக பதவி வகித்த சுரேந்திரன் ரூ. 20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டார். இதனையடுத்து கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிரிக்கெட் சங்க கூட்டத்தில் சுரேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சங்கத்துக்கு கொடுக்கப்பட்டிருந்த தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் அங்கீகாரத்தை அபகரிக்க போலி கையெழுத்து மற்றும் ஆவணம் தயாரித்து, ஈரோடு மாவட்ட பதிவாளரிடம் கொடுத்து, மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன்- ஈரோடு என்ற பெயரில் புதிய சங்கத்தை பதிவு செய்துள்ளார்.
ஈரோடு கிரிக்கெட் சங்க புதிய செயலாளர் இளங்கோவன் கொடுத்த புகாரின்பேரில் சுரேந்திரன் உள்ளிட்ட 17 பேர் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது போலி ஆவணம் தயாரித்தது, வெளிநாட்டில் இருந்தவர் பெயரில் கையெழுத்து பெற்றது, நீதிபதி ஒருவர் மகனை உறுப்பினராக சேர்த்தது, கல்லூரிகள் இணைந்ததாக போலி ஆவணம் தயார் செய்தது போன்ற தகவல்கள் வெளியானது. இந்த தகவல் ஊர்ஜிதமானதால் இது குறித்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுரேந்திரன் போலியாக துவங்கிய மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன்- ஈரோடு என்பதை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்த அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை கிரிக்கெட் போட்டிகள் மற்றும் வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் ரூ. 20 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது என்று பரபரப்பு குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடிந்துள்ளதாககவும், அது பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் தெரிய வருகின்றது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications