ராஜ்யசபா தேர்தல்: திமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவு
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் திருச்சி சிவாவை ஆதரிப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 7-ந் தேதி நடைபெற உள்ளது. ஒரு ராஜ்யசபா எம்.பிக்கு 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. 151 எம்.எல்.ஏக்களைக் கொண்ட அதிமுகவுக்கு 4 எம்.பிக்கள் கிடைப்பது உறுதி.

இடதுசாரிகள் மற்றும் தேமுதிக, புதிய தமிழகம் ஆகியவற்றின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் மேலும் 1 எம்.பியும் அதிமுக அணிக்கு கிடைக்கும்.
இந்நிலையில் 23 எம்.எல்.ஏக்களைக் கொண்ட திமுக, தமது வேட்பாளராக திருச்சி சிவாவை நிறுத்தியுள்ளது. திருச்சி சிவாவுக்கு மனித நேய மக்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைக்கும். அதேபோல் தற்போது புதிய தமிழகமும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ராஜ்யசபா தேர்தலில் திருச்சி சிவாவை ஆதரிப்போம் என்றார்.
புதிய தமிழகம் கட்சிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி, நிலக்கோட்டை ராமசாமி ஆகிய 2 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால் நிலக்கோட்டை ராமசாமி, புதிய தமிழகம் மீது அதிருப்தி அடைந்து அதிமுக ஆதரவாளராக இருக்கிறார். இதனால் புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. வாக்கு மட்டுமே திருச்சி சிவாவுக்கு கிடைக்கும்.
தற்போதைய நிலையில் திருச்சி சிவாவுக்கு மொத்தம் 26 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. காங்கிரஸ், தேமுதிக, பாமக இன்னமும் நிலைப்பாடு அறிவிக்கவில்லை.
இதனிடையே 6 எம்.பி. இடத்துக்கு தேமுதிக அல்லது காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தினால் இந்த 6வது இடத்துக்காக போட்டியிடும் வேட்பாளர்களில் யார் கூடுதல் வாக்குகளை பெறுகிறார்களோ அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications