உள்துறை செயலர், டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆர்.எஸ்.எஸ்.. பேரணிக்கு அனுமதி மறுப்பால் கொதிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்காததால், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட 4 அதிகாரிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய நாட்டின் 76-வது சுதந்தர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் 33 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

RSS sends notice to home secretary, dgp as as police did not grant permission to hold rally

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மருது சகோதரர்கள் குருபூஜை மற்றும் தேவர் குருபூஜை நடைபெற உள்ளதால் இந்த மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் போலீசாரின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரணி நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்தது.

மேலும், பட்டாசுகள் வெடிக்கக் கூடாது, ஊர்வலத்தில் 500 பேருக்கு அதிகமானோர் பேரணியில் பங்கேற்க கூடாது, சாதி , மத அடையாளங்களை கொண்டிருக்கும் பாடல்களை பாட அனுமதியில்லை, பிற சமுக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ள கூடாது, கம்பு உள்ளிட்ட எந்த பொருட்களையும் பேரணியில் எடுத்து செல்ல கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், நீலகிரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், நீலகிரி மாவட்ட எஸ்.பி. சுந்தர வடிவேல், எருமாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோருக்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர்களும் இருந்த நிலையில், டிஜிபி இதனை கவனத்தில் கொள்ளாதது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்றும், உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், தவறினால் உள்துறை செயலர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+