கவுண்டமணி குறித்து ஏன் தேவையில்லாமல் புரளி கிளப்புகிறார்கள்? #goundamani
சென்னை: நகைச்சுவை நடிகர் கவுண்டமணி குறித்து மீண்டும் ஒரு புரளி கிளம்பியுள்ளது. இதை கண்டித்துள்ளார் அவரது செய்தித் தொடர்பாளர் விஜய் முரளி.
அடிக்கடி கவுண்டமணி குறித்து திரையுலகில் சிலர் புரளி கிளப்பி வருகின்றனர். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. திரையுலகிலிருந்தே சிலர் இவ்வாறு அடிக்கடி வதந்தி கிளப்புவதாக கூறப்படுகிரது.

நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டு பட்டையைக் கிளப்பியவர் கவுண்டமணி. இப்போதும் கூட அவர் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, வாய்மை என பிசியாகவே உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முதல் கவுண்டமணி குறித்து வதந்தி பரவி வருகிறது. இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் விஜய் முரளி அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவ்வப்போது கவுண்டமணி குறித்து இது மாதிரி புரளிகளை கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால், அவர்களுக்கு என்ன பலன் என்றும் புரியவில்லை. சமீபத்தில்கூட புன்னகை அரசி கே.ஆர்.விஜயா குறித்து இதேபோல் வதந்திகளை பரப்பினார்கள். அவர் அறிக்கை தந்ததும் வதந்திகள் புஸ் ஆனது.
சற்று முன்புதான் அவரை சந்தித்தேன். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கிறேன். புதிய படம் ஒன்றின் கதையை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் நடிக்கும படத்தின் அறிவிப்பு வெளிவரும். அந்தப் படத்தின் துவக்க விழாவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் என்று கூறினார். இந்தியா முழுவதும் அவரது ரசிகர்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம். அவர் மிகவும் நலமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
கவுண்டமணி பாணியில் சொல்வதானால்... ஏண்டா உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications