பென்னாகரம் வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்தா? - 2வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை
தர்மபுரி: பென்னாகரம் அருகே வனப்பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக வனத்துறையினர் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரைத் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ளது தும்கல் வனப்பகுதி. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று சுற்றி கொண்டிருந்ததாக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று மாலை அப்பகுதியில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டுள்ளது. எனவே, வனப்பகுதிக்கு அருகே வசித்து வரும் மக்கள், ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியதாக பென்னாகரம் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், பென்னாகரம் போலீசார் மற்றும் வனத்துறையினர், வருவாய்த்துறையினர் ஆகியோர் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரைத் தேடத் தொடங்கினர். யானைகளை கண்காணிக்கும் டவர் மீது ஏறியும் பைனாகுலர் மூலம் பார்த்தனர். ஆனால் ஹெலிகாப்டர் ஏதும் கண்ணுக்கு தென்படவில்லை.
அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும், இரவு நேரமாகி விட்டதாலும் நேற்று மாலை தேடுதல் வேட்டை நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று காலை மீண்டும் தேடும் பணி ஆரம்பமானது.
இதற்கிடையே போலீசாருக்கு தகவல் அளித்த நபரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த மர்மநபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பெங்களூர், மற்றும் ஓசூரில் உள்ள விமான பயிற்சி பள்ளிகளில் ஏதாவது ஹெலிகாப்டர் காணாமல் போய்விட்டதா? என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மொரக்கால் காடு, வெற்றிலை கொடிகால் ஆகிய வனப்பகுதியிலும் இன்று தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதிகளில் பரபரப்புடன் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications