கிராமப் பள்ளியும், நகரப் பள்ளியும்.. இணைந்து கற்கும் புதுமைத் திட்டம்.. காரைக்குடியில்!
காரைக்குடி: அனைவருக்கும் கல்வி இயக்கம், மூலம் 2016 -17 ம் கல்வி ஆண்டில் பள்ளி பரிமாற்றத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறத்தில் இயங்கும் ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நகர்புறத்தில் இயங்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுடன் இணைந்து கற்கும் வகையில் வழிவகை திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் படி கல்லல் ஒன்றியத்தில் உள்ள வைரவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியும் ஒன்றிணைக்கப்பட்டது. இதன்படி, இன்று (26-10-16) கல்லல் ஒன்றியம், என் வைரவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் பயிலும் 20 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் லதா, உமா ஆகியோர் இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்தனர்.

அம் மாணவர்களை இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும், மாணவர்களின் கரவொலி மூலமும் வரவேற்றனர். இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ஆ. பீட்டர் ராஜா தலைமை ஏற்றார். பள்ளி மாணவர் லட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மேற்பார்வையாளர் நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் இராஜேந்திரன், சிறப்புக் கல்வியாளர் ஆறுமுகம், வைரவன்பட்டி ஆசிரியர்கள் லதா மற்றும் உமா ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் அவர்கள், இரு பள்ளி மாணவர்களும் ஒன்றிணைவதன் மூலம், மாணவர்கள் ஒன்று கூடி பழகி, அவர்களின் அறிவு, சமுகபண்புகள் , நடத்தையில் மாற்றம் ஏற்படும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

மாணவர்கள் பிராத்தனைக் கூட்டத்தில் இருந்து பள்ளியின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு ஆங்கில நாளேடு வாசிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. துணியின் மூலம் ரோஜாப்பூ செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பட்டதாரி ஆசிரியர்கள் விஜயகாந்தி மற்றும் மீனாட்சி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பட்டதாரி ஆசிரியர் கீதா நன்றி கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications