"அம்பாசிடர்" கார்தான் "ஆடி" கார் போல ஜொலிக்கிறது.. சட்டசபையில் அமைச்சர் சண்முகநாதன் ருசிகரம் !
சென்னை: திமுக ஆட்சி காலத்தில் அம்பாசிடர் கார் போல இருந்த பால்வளத்துறை தற்போது புதுமை நிறைந்த ஆடிகார் போல ஜொலிக்கிறது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் சண்முகநாதன் கூறினார்.
தமிழக சட்டசபையில் பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் சண்முகநாதன் பேசுகையில், திமுக ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அம்பாசிடர் கார் போல பழமையாக இருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் அம்பாசிடர் கார், புதுமை நிறைந்த ஆடிகார் போல மாறியுள்ளது என்றார்.

மேலும், அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 17 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களிலும் தலா ரூ.50 லட்சம் வீதம் 17 அதிநவீன பாலகங்கள் ரூ.8.5 கோடியில் அமைக்கப்படும்.
நிகழாண்டில் ரூ.7 கோடியில் 35 பால் குளிரூட்டும் நிலையங்களும் பொலிவுறும் வகையில் மேம்படுத்தப்படும்.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சமச்சீர் கால்நடைத் தீவன திட்டமானது, காஞ்சிபுரம்-திருவள்ளூர், தருமபுரி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், சொந்த நிலம் கொண்டுள்ள 100 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.10 லட்சம் செலவில் 100 புதிய கட்டிடங்கள் கட்டித் தரப்படும் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications