"கூடங்குளம்" உதயகுமார் வேட்புமனு தாக்கல் தாக்கல் செய்தார்!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயக்குமார், நாகர்கோவில் ஆட்சியர் நாகராஜனிடம் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

உதயகுமாரின் சொந்த ஊர் நாகர்கோவிலை அடுத்த இசங்கன்விளை. அங்கு மெட்ரிகுலேசன் பள்ளி நடத்தி வருகிறார். கூடங்குளம் போராட்டம் தொடங்கியது முதல் இடிந்தகரையிலேயே தங்கியிருந்து போராடி வந்தார்.

இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம் நடந்தும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து லோக்சபா தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட கூடங்குளம் எதிர்ப்புக்குழுவினர் முடிவு எடுத்தனர்.

அதன்படி கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரும், நெல்லை தொகுதியில் பாதிரியார் மை.பா. ஜேசுராஜனும், தூத்துக்குடியில் புஷ்பராயனும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இவர்கள் 3 பேர் மீதும் கூடங்குளம் போராட்டம் தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்ததால் இவர்கள் இடிந்தகரையை விட்டு வெளியேறினால் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்தநிலையில் போராட்டக்குழுவினர் தங்களை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

உச்சநீதிமன்றம் தடை

உச்சநீதிமன்றம் தடை

இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடந்து வந்த வழக்கில் கூடங்குளம் போராட்டக்குழுவினரை தமிழக அரசு இப்போதைக்கு கைது செய்யாது என கூறப்பட்டதை தொடர்ந்து உதயகுமார், மை.பா.ஜேசுராஜன், புஷ்பராயன் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என்ற பேச்சு முடிவுக்கு வந்தது.

புறப்பட்ட உதயகுமார்

புறப்பட்ட உதயகுமார்

இதையடுத்து கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் உதயகுமார், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என குமரி மாவட்ட ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார். அதன்படி இடிந்தகரையில் இருந்து இன்று காலை உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் நாகர்கோவில் நோக்கி புறப்பட்டார்.

வழியனுப்பிய மக்கள்

வழியனுப்பிய மக்கள்

கடந்த ஆண்டுகளாக இடிந்தகரையை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கி இருந்த போராட்ட ஆதரவாளர்களும் அவர்களுடன் திரளாக புறப்பட்டு வந்தனர்.

அப்போது இடிந்தகரையில் கூடியிருந்த பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி, அவர்களை வாழ்த்தி வழியனுப்பினர்.

வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

குமரி மாவட்ட எல்லையான அஞ்சுகிராமத்தில் உதயகுமாருக்கு ஆம்ஆத்மி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு அவர் காரில் இருந்து திறந்த ஜீப்புக்கு மாறினார். அதில் நின்றபடி அப்பகுதி மக்களிடம் வாக்கு கேட்டார். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக நாகர்கோவில் வந்தார்.

வேட்புமனு தாக்கல்.

வேட்புமனு தாக்கல்.

உதயகுமார் இசங்கன்விளையில் உள்ள வீட்டுக்கு சென்ற அவர் பெற்றோரிடம் ஆசி பெற்றார். பின்பு அவர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கலெக்டர் நாகராஜனிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். உதயகுமாருக்கு கூடவே பாதுகாப்புக்கு போலீஸ் வாகனமும் உடன் சென்றது.

நெல்லையில் ஜேசுராஜ்..

நெல்லையில் ஜேசுராஜ்..

இதேபோல் நெல்லையில் கூடங்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த மை.பா. ஜேசுராஜ் வேட்பு மனுதாக்கல் செய்தார்..

நெல்லையில் மை.பா. ஜேசுராஜ்

நெல்லையில் மை.பா. ஜேசுராஜ்

இதேபோல இன்று காலை நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியும்,கலெக்டருமான கருணாகரன்முன்னிலையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.ஆம்ஆத்மி கட்சி சார்பில்நெல்லை தொகுதியில்போட்டியிடும் மை.பா.ஜேசுராஜ்மனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக ஆம் ஆத்மி தேர்தல் பணி செயலாளர் ஏ.எஸ்.ரகு மனு தாக்கல் செய்தார்.

தடுத்து நிறுத்திய போலீஸ்

தடுத்து நிறுத்திய போலீஸ்

முன்னதாக மனு தாக்கல் செய்ய ஆம்ஆத்மி கட்சியினர் நெல்லை எம்.ஜி.ஆர். சிலையில்இருந்து ஊர்வலமாகபுறப்பட்டு கலெக்டர்அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். வேட்பாளர்மற்றும் அவருடன் 4 பேர்மட்டுமே செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து வேட்பாளர்மை.பா.ஜேசுராஜ் மற்றும் 4 பேரும் மட்டும் சென்று மனு தாக்கல்செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+