படிக்காமல் பார்வார்டு செய்துவிட்டேன்... மன்னிக்கவும்... பேஸ்புக் பதிவு குறித்து எஸ் வி சேகர்
நண்பர் அனுப்பியதை படிக்காமல் பார்வார்டு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று பேஸ்புக் பதிவு குறித்து எஸ் வி சேகர் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: நண்பர் அனுப்பிய விஷயத்தை படிக்காமல் அப்படியே பார்வார்டு செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று எஸ் வி சேகர் தெரிவித்தார்.
பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஆளுநரின் நிருபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு அவர் அந்த பெண் நிருபர் லட்சுமியின் கன்னத்தில் தட்டினார். இது அந்த பெண்ணுக்கு எரிச்சலையூட்டியது.
இதையடுத்து தனது உணர்வுகளை டுவிட்டர் மூலம் அந்த நிருபர் ஆளுநருக்கு வெளிப்படுத்தியதை அடுத்து அவர் மன்னிப்பும் கேட்டார்.
பேஸ்புக் பதிவு
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் கேவலமான முறையில் எஸ் வி சேகர் ஒரு பேஸ்புக் பதிவை பார்வார்டு செய்திருந்தார். இதனால் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார். பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்திருந்தனர்.

பத்திரிகை சகோதரிகள்
கடும் எதிர்ப்பு நிலவியதை அடுத்து தான் பார்வேடு செய்த கருத்தால் மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறி ஒரு கடிதத்தை எஸ் வி சேகர் அனுப்பியுள்ளார்.

பார்வேடு மெசேஜ்
அந்த கடிதத்தில் முகநூலில் எனது நண்பர் எழுதிய ஒரு கருத்தை படிக்காமல் தவறுதலாக என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு விட்டேன். சற்று நேரத்தில் என் நண்பர் அதில் உள்ள வாசகங்கள் தரக்குறைவாக இருப்பதாக சொன்னார். உடனடியாக அது நீக்கப்பட்டும் விட்டது. அதில் உள்ள கருத்துகள் குறிப்பாக பெண்களை தரக்குறைவாக சொல்லக் கூடிய எதையும் நான் ஆதரிக்கவில்லை.
மனவருத்தம்
அனைத்து பெண்களையும் சகோதரிகளாக பார்க்கும் குடும்பத்திலிருந்து வருபவன் நான். தனி மனித ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவன். இந்த சம்பவத்தால் மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிகை சகோதரிகளுக்கும் என் மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். அதே சமயம் நான் நீக்கிவிட்ட பதிவை பத்திரிகை சகோதரிகளுக்கு மனவருத்தம் ஏற்படுத்திய பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இப்போதும் தொடர்ந்து போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications