வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட்டு கடன் வாங்கிவிட்டு... "குத்துதே குடையுதே" ஏன்? - எஸ்.வி.சேகர்
கடன் வாங்குவதற்கு முன்பு வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட்டு கடன் வாங்கிவிட்டு பின்னர் புலம்புவது ஏன் என்று எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: கடன் வாங்குவதற்கு முன்பு தெரிந்தே வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட்டு கடன் வாங்கிவிட்டு பின்னர் புலம்புவது ஏன் என்று எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் மதுரையில் உள்ள அன்புச்செழியனிடம் கடன் பெற்றதாகவும் அவர் அசோக்குமாரின் குடும்பப் பெண்களையும் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அசோக்குமார், அபிராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து திரபைத்துறையிநர் ஒன்று சேர்ந்து கந்து வட்டியால் தயாரிப்பாளர்களின் பாதிப்பு குறித்து கருத்து கூறிவருகின்றனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்
சினிமாவில் கந்து வட்டி கும்பலுக்கு ஒழித்து கட்டுவோம் என்று நடிகர் விஷால் சபதம் ஏற்றுள்ளார். இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து அவர் மிகவும் ஆக்ரோஷமாக கருத்துகளை தெரிவித்தார். இதை சுட்டிக் காட்டி எஸ்.வி.சேகர் தனது கருத்துகளை தொடர் டுவீட்டுகளாக பதிவு செய்துள்ளார்.
|
சொன்னபடி கொடுத்து விடுவோம்
இதுகுறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில், இனி கடன் வாங்கி படமெடுக்க மாட்டோம். வாங்கினால் சொன்னபடி திருப்பிக்கொடுத்து விடுவோம். வாங்கும் போது நீட்டும் எல்லா வெள்ளை பேப்பரிலும் கையெழுத்து போடமாட்டோம் என்று கந்து வட்டியை ஒழிப்பார்களா என்ற அர்த்தத்தில் எஸ்.வி.சேகர் கருத்தை பதிவிட்டுள்ளார்.
|
ஆடம்பர வாழ்க்கை
தனது அடுத்த டுவீட்டுகளில் எஸ்.வி.சேகர், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ஏழைத்தொழிலாளி கடன் வாங்கிறத்துக்கும் ஆடம்பர சுக போக வாழ்க்கைக்கு கடன் வாங்கிறவருக்கும் வித்யாசம் இருக்கு. கடனில்லாமல் வாழ்பவரே மிகுந்த சந்தோஷமானவர்.
|
நேர்மையாக சம்பாதிப்பது
இரண்டு வகை வாழ்க்கை முறை. 1. தன் வருமானத்திற்குள் வாழ்வது. 2.தன் வாழ்க்கை முறைக்கு ஏற்ப நேர்மையாக மிக அதிகமாக உழைத்து சம்பாதித்து வாழ்வது.
|
வெள்ளை பேப்பரில்...
18 வயதுக்கு மேல் ஆன யாரும் வெள்ளைப்பேப்பரில் கையெழுத்துப்போட்டுவிட்டு புலம்புவதோ.அடுத்தவரை குறை சொல்வதோ ஏற்புடையது அல்ல. சட்டம் துணை நிற்காது என்று திரைத்துறையினரையே சாடுவது போல் கருத்துகளை எஸ்.வி.சேகர் பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications