சென்னையில் டெண்டுல்கர் தன் கையால் அசெம்பிள் செய்த பி.எம்.டபிள்யூ–5 சீரிஸ் கார்!
சென்னை: ‘இந்தியாவில் தயாரிப்போம்' என்ற முன்முயற்சியைக் கொண்டாடும் வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின், சென்னை கார் நிறுவனத்தில் என்ஜினீயர்களுடன் இணைந்து ‘பி.எம்.டபிள்யூ - 5 சீரிஸ்' என்ற காரை அசெம்பிளிங் செய்வதில் ஈடுபட்டார்.

சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் பி.எம்.டபிள்யூ. கார் நிறுவனம் இயங்கி வருகிறது. ‘கிரிக்கெட் கடவுள்' என ரசிகர்களால் அழைக்கப் படும் பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் இங்கு சென்றிருந்தார்.

அப்போது, ‘இந்தியாவில் தயாரிப்போம்' என்ற முன்முயற்சியைக் கொண்டாடும் வகையிலும், இந்திய சந்தைக்கான உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், .எம்.டபிள்யூ. கார் நிறுவனத்தின் ‘அசெம்பிளி லைன்'களில் என்ஜினீயர்களுடன் இணைந்து ‘இந்திய ஆட்டோ காம்போனென்ட் சப்ளையர்'களின் உதிரிபாகங்களை பயன்படுத்தி ஒரு ‘பி.எம்.டபிள்யூ-5 சீரிஸ்' என்ற காரை சச்சின் உருவாக்கினார்

பின்னர், இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசுகையில், "நீண்ட காலமாக இந்த நிறுவனத்தின் காரை பயன்படுத்தி வருகிறேன். என் கையால் ஒரு காரை உருவாக்குவது என்பது மறக்க முடியாதது. அடுத்த முறை நான் இந்த நிறுவனத்தின் காரில் செல்லும் போது நான் ஒரு காரை உருவாக்கினேன் என்று பெருமையுடன் சொல்லுவேன்'' என்றார்.

நிகழ்ச்சியில் அந்த நிறுவனத்தின் இந்திய தலைவர் பிலிப் வான் சர், சென்னை மேலாண்மை இயக்குனர் ராபர்ட் பிரிட்ராங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications