சகாயம் விசாரணைக் குழுவில் ஆஜராக இருந்த புகார்தாரருக்கு கொலை மிரட்டல்!
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பான ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக் குழுவில் ஆஜராக இருந்தவருக்கு மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளது மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் தலைமையிலான விசாரணை தொடங்க உள்ளது. அந்த விசாரணையில் மேலூர் குமார் நகரில் வசிக்கும் முருகேசன் (58) என்பவரும் ஆஜராக உள்ளார்.
இந்நிலையில், முருகேஷனுக்கு மர்மநபர்கள் சிலர் ஆயுதங்களுடன் நேரில் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து முருகேசன் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் முறைகேடு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது, மதுரை ஆட்சியராக இருந்த சகாயத்திடமும் ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்தேன். தற்போது, நீதிமன்ற உத்தரவின்படி கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் விசாரணை நடத்த உள்ளார்.
இந்தநிலையில், கடந்த 7 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் 2 கார்களில் ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட ஒரு கும்பல் என் வீட்டின் கதவை தட்டி எழுப்பினர். சகாயம் நடத்தும் விசாரணையில் நீ கலந்து கொள்ளக் கூடாது. மீறி நீ அதில் கலந்து கொண்டால் உன்னை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிவிட்டு சென்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
முருகேஷன் அளித்த புகாரின் அடிப்படையில் மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், முருகேஷனுக்குப் போலீசார் பாதுகாப்பும் அளித்துள்ளனர். இதற்காக இரண்டு போலீசார் சுழற்சி முறையில் சாதாரண உடையில் கைத் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications