எனக்கு சகாயம் பிடிக்கும், ஜெயலலிதாவும் பிடிக்கும்... இது கீர்த்தி பிரியதர்ஷினி அன்று சொன்னது!
சென்னை: சகாயம் குழுவில் இன்னொரு விசாரணை அதிகாரியாக இடம் பெற்றுள்ள இளம் துணை ஆட்சியர் கீர்த்தி பிரியதர்ஷினிக்கு மிகவும் பிடித்த ஐஏஎஸ் அதிகாரியே சகாயம்தானாம். டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற பின்னர் அவர் சொன்ன வார்த்தை இது. இன்று அவருடன் இணைந்து அவரது குழுவில் இடம் பெற்று பணியாற்றும் திரில்லான அனுபவம் அவருக்குக் கிடைக்கப் போகிறது.
அதிமுகவைச் சேர்ந்த சென்னை மேயரான சைதை துரைசாமி நடத்தி வரும் மனித நேயம் அறக்கட்டளை பயிற்சி மையத்தில் இணைந்து படித்து குரூப் 2 தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று துணை ஆட்சியர் ஆனவர் கீர்த்தி பிரியதர்ஷினி.
கிரானைட் முறைகேட்டை விசாரித்து வரும் சகாயம் குழுவில் புதிய பெண் அதிகாரிகீர்த்தி பிரியதர்ஷினி.கிரானைட் முறைகேட்டை வி...
Posted by Lawyer Palaniswamy on Sunday, April 5, 2015
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த இவரது தந்தை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றுகிறார். அம்மா தலைமை ஆசிரியை ஆவார். ஒரு தம்பி மட்டும்.
பிஇ படித்தவரான பிரியதர்ஷினி தற்போது நெல்லை மாவட்ட நில எடுப்புப் பிரிவில் துணை ஆட்சியராக பணியாற்றுகிறார். அதற்கு முன்பு அவர் சிவகாட்சி கோட்டாட்சியர், புதுக்கோட்டையில் துணை ஆட்சியராக இருந்துள்ளார்.
அரசு அதிகாரியாக வேண்டும் என்பது இவரது சிறு வயதுக் கனவாக இருந்துள்ளது. அதாவது 2ம் வகுப்பு படித்தபோதே அந்தக் கனவு இவருக்குள் வந்து விட்டது. பின்னர் வளர வளர போட்டித் தேர்வுகள் ஒன்று கூட விடாமல் எழுதி வந்துள்ளார்.
சென்னையில் உள்ள மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகம் பற்றிக் கேள்விப்பட்டு, இங்கு வந்து விடுதியில் தங்கிப் படித்துள்ளார். சாந்தாஷீலா நாயர், சகாயம் போன்றோர் இவருக்கு ஆதர்ச நாயகர்கள். "இவர்கள்தான் எனக்கு 'இன்ஸ்பிரேஷன்'. ஜெயலலிதாவின் துணிவும், தைரியமும் பிடிக்கும். இவர்களைப் போல மக்கள் சேவைப் பணியில் மங்காத தைரியத்துடன் பீடுநடை போடுவேன் என்று கூறியுள்ளார் கீர்த்தி.
டான்ஸ், மியூசிக் என சகல கலைகளிலும் வல்லவராக இருக்கும் கீர்த்தி, தைரியமானவரும் கூட. பல மடங்கு தைரியசாலியான சகாயம் குழுவில் இணைந்து பணியாற்றுவது நிச்சயம் கீர்த்திக்கு மேலும் பல மூர்த்திகள் கிடைக்க வழி வகுக்கும் என்று நம்பலாம்.












Click it and Unblock the Notifications