தம்பிதுரைக்காக சென்னையில் இருந்து கரூர் வந்து வாக்கு கேட்ட சைதை துரைசாமி
கரூர்: கரூரில் திமுக வேட்பாளர் சின்னச்சாமியிடம் கடும் போட்டியில் உள்ள அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்காக அத்தொகுதியில் சென்னை மேயர் சைதை துரைசாமி வாக்கு சேகரித்தார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து கரூர், அரவக்குறிச்சி, சீத்தப்பட்டி காலனி, சின்ன தாராபுரம், தென்னிலை, வேலாயுதம்பாளையம், பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் சென்னை மேயர் சைதை துரைசாமி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆனால் மட்டுமே தமிழக தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். காவிரி நீர் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 40 பேரும் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் அதிக எம்.பி.க்களை கொண்ட கட்சி என்ற முறையில் முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வருவார். அப்போது தான் தமிழக உரிமைகள் மீட்கப்படும், பாதுகாக்கப்படும். அவை எல்லாம் உங்கள் கையில் தான் உள்ளது வாக்குகளாக என்றார்.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் இருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications