Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

களைகட்டும் காதலர் தினம்: வாழவைக்கும் காதலுக்கு ஜெ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலர் தினத்தை விமர்சித்து பல பகுதிகளில் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. ஆனாலும் அதற்கெல்லாம் அஞ்சாமல் காதலர்கள் தங்களின் தினத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் காதலர்கள் பரிமாறிக்கொள்ளும் பரிசுப்பொருட்கள் விற்பனை பல நூறு கோடி ரூபாய்களுக்கு நடைபெறும். ஆனால் என்னதான் பரிசு கொடுத்தாலும் காதலின் அடையாளமாக ஒரே ஒரு ரோஜா பூ கொடுப்பதற்கு ஈடாகாது என்று சொல்வார்கள்.

காதலை வெளிப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் சிவப்பு நிற ரோஜாக்களே உகந்தது என்ற எண்ணம் உலகம் முழுவதும் நிலவுகிறது. எனவேதான் காதலர் தினத்திற்காக சிவப்பு நிறத்தினால் ஆன பரிசுப்பொருட்களையும், ரோஜா மலர்களைகயும் உற்சாகமாக தேடி தேடி வாங்குகின்றனர் காதலர்கள்.

சென்னையில் காதலர் தினம்

சென்னையில் காதலர் தினம்

காதல் தினத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னையில் பரிசுப் பொருட்கள் விற்பனை மையங்கள், மலர் விற்பனை மையங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் விற்பனை மையங்கள் களை கட்ட ஆரம்பித்து விட்டன.

தயாராகும் பரிசுப் பொருட்கள்

தயாராகும் பரிசுப் பொருட்கள்

சென்னையில், மலர் கொத்துகளுடன் கூடிய, "பொக்கே' விற்பனை மையங்களில் விதவிதமான செயற்கை மலர்களாலான கண்ணைக் கவரும், செந்நிற "பொக்கே'க் கள் தயாராகி வருகின்றன.

காதலர்களை கவரும் பரிசு

காதலர்களை கவரும் பரிசு

சென்னையில் "பொக்கே' விற்பனை மையத்தில் காதலர்களுக்காக ஒரு ரோஜா, 20 ரூபாய் முதல், "பொக்கே'க்கள் 8,000 ரூபாய் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இயற்கை மலர்களுக்கு ஈடான இந்த செயற்கை மலர், "பொக்கே'க்கள் காதலர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாழ்த்து அட்டைகள்

வாழ்த்து அட்டைகள்

மலர்கள், மலர் கொத்துக்கள் தவிர, வாழ்த்து அட்டைகள் வழங்குவதும் காதலர் தினத்தில் அன்பின் பரிமாற்றங்களில் ஒன்றாக உள்ளது. பெரும்பாலும் முதல் முறையாக காதலை வெளிப்படுத்துபவர்கள் வாழ்த்து அட்டைகளை பயன்படுத்துகின்றனர். இந்தாண்டில், பல புதிய வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

விலை உயர்ந்த பரிசுகள்

விலை உயர்ந்த பரிசுகள்

காதல் ரசம் சொட்டும் வாசகங்கள் அடங்கிய வித்தியாசமான வாழ்த்து அட்டைகள், 2,000 ரூபாய் மற்றும் அதற்கும் அதிகமான விலையிலும் உள்ளது. மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள், பரிசு விற்பனை மையங்கள் உள்ளிட்டவற்றில் தற்போது வாழ்த்து அட்டைகள் அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கைக்குட்டை காதல்

கைக்குட்டை காதல்

காதலை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய கைக் குட்டைகள், துணியாலான பரிசுப் பொருட்கள் என விதவிதமான பரிசுப் பொருட்களும் குவிந்துள்ளன. இவற்றை தேடி தேடி வாங்குகின்றனர் காதலர்கள்.

லவ் மாத்திரை

லவ் மாத்திரை

காதலை சொல்வதற்கு, "லவ்' மாத்திரையும் விற்பனைக்கு வந்துள்ளது. இம்மாத்திரை, சாப்பிடுவதற்காக அல்ல ; காதலை வெளிப்படுத்த மட்டும் தான். மருந்து அடைக்கப்படும் கேப்சூலின் உள்ளே, சிறிய இதயம் படத்துடன் உள்ள பேப்பரில் காதலர்கள் சொல்ல நினைப்பதை எழுதி அடைத்து தரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாட்டிலில், ஆறு மாத்திரைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் விலை 60 ரூபாய். வித்தியாசமான விஷயமாக இருப்பதால் காதலர்கள் மத்தியில் இந்த கேப்சூல் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒற்றை ரோஜா

ஒற்றை ரோஜா

காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் என்னதான் பரிசு கொடுத்தாலும் காதலின் அடையாளமாக ஒரே ஒரு ரோஜா பூ கொடுப்பதற்கு ஈடாகாது என்று சொல்வார்கள். இதனால்தான் காதலர் தினத்தன்று உலகில் எல்லா நாடுகளிலும் ரோஜாபூக்கள் விற்பனை பல மடங்கு அதிகமாக நடைபெறும்.

ஓசூர் ரோஜாக்கள்

ஓசூர் ரோஜாக்கள்

எல்லா நாடுகளிலும் ரோஜா செடிகள் வளர்த்து பூக்கள் அறுவடை செய்யப்பட்டாலும் ஓசூரில் உள்ள ரோஜா பூக்களுக்கு தனி அந்தஸ்தும், மரியாதையும் உள்ளது. ரோஜா பூக்கள் செழுமையாகவும், அழகாகவும் இருப்பதால் மேற்கத்திய நாடுகள் போட்டி போட்டு ஓசூர் ரோஜாக்களை வாங்குகின்றன.

குறைந்து போன வரவேற்பு

குறைந்து போன வரவேற்பு

கடந்த ஆண்டு காதலர் தின சமயத்தில் மட்டும் சுமார் 70 லட்சம் ரோஜாபூக்கள் ஓசூரில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. கென்யா, எத்தியோப்பியா, கொலம்பியா, ஈக்வடார் ஆகிய நாடுகளில் இருந்து அதிக ரோஜாபூக்கள் வரத்தொடங்கி விட்டதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஓசூர் ரோஜா பூக்களுக்கு வரவேற்பு குறைந்து போனது.

40 சதவிகித ஆர்டர் குறைவு

40 சதவிகித ஆர்டர் குறைவு

இதனால் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஓசூர் பகுதி விவசாயிகளுக்கு 40 சதவீத ரோஜா ஆர்டர் குறைந்து போனது. எனவே இந்த ஆண்டு ஓசூரில் இருந்து சுமார் 50 லட்சம் ரோஜாக்கள் தான் ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி அளவு குறைந்தாலும் ரோஜா பூக்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படாது என்று தெரிய வந்துள்ளது.

உதகை ரோஜாக்கள்

உதகை ரோஜாக்கள்

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு உள்ளிட்ட பகுதிகளில் பசுமை குடில்கள் அமைத்து மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

காதலர் தினம் நெருங்குவதை முன்னிட்டு உதகை ரோஜாக்கள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி போன்ற நகரங்களுக்கும், ஜெர்மன், இங்கிலாந்து, பிரான்சு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வாழவைக்கும் காதலுக்கு ஜெ

வாழவைக்கும் காதலுக்கு ஜெ

காதலர் தினக்கொண்டாட்டங்களுக்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்தாலும், இந்த காதலர் தினம்தான் எங்களை வாழவைக்கிறது என்று மகிழ்ச்சியடைந்துள்ளனர் உதகமண்டல ரோஜா மலர் சாகுபடி விவசாயிகள். எனவே எங்களை வாழவைக்கும் காதலுக்கு ஜெ! என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+