சேலம் 8 வழி சாலைக்கு மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள்.. அதிக இழப்பீடு வழங்குவோம்: சட்டசபையில் முதல்வர்
சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு மக்கள் அமோக ஆதரவு அளிப்பதாகவும், இழப்பீடு மிகவும் அதிக அளவில் வழங்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு மக்கள் அமோக ஆதரவு அளிப்பதாகவும், இழப்பீடு மிகவும் அதிக அளவில் வழங்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலம் - சென்னை 8 வழி சாலை அமைக்கப்படுவது உறுதி என்று தமிழக முதல்வர் சட்டசபையில்அறிவித்துள்ளார். இந்த சாலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் இதனால் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.இந்த சாலை போடப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே மக்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள்.

இந்த சாலையால் பல ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் பாதிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று சட்டசைபையில் இதுகுறித்து முதல்வர் பேசினார்.
அதில், தரமான சாலை அமைக்க வேண்டிய தேவை உள்ளது. தமிழகம் தொழில்வளர்ச்சி பெற்று வருகிறது. அதனால் இந்த சாலையின் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த சாலைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
சேலம்- சென்னை சாலை புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும்.8 வழி சாலை காரணமாக தமிழ்நாடு புதிய வளர்ச்சி பெறும். அதிநவீன தொழில்நுட்பத்தில் சாலையில் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இந்த சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு மிகவும் அதிக இழப்பீடு அளிக்கப்படும். மக்கள் இழப்பீடு குறித்து கவலைப்பட வேண்டாம். தருமபுரியில் இதுவரை 90 சதவிகிதம் நிலம் கையகபடுத்தபட்டுவிட்டது.
மக்கள் இந்த சாலைக்கு அமோக ஆதரவு அளிக்கிறார்கள். மக்களுக்கு சாலையின் தேவை புரிகிறது. மக்கள் சம்மதம் தெரிவித்த பின்பே சாலை போடப்படுகிறது, என்றுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications