சீமானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சேலம் நீதிமன்றம்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சீமானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது
சேலம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை-சேலம் நடுவே அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். விவசாயிகளை பாதிக்கும் இந்த திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கூமாங்காடு என்ற இடத்திற்கு சென்ற சீமான், சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்டார்.
அப்போது திடீரென மல்லூர் போலீசார் அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் சீமான்.
இதையடுத்து சீமான் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் சீமானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications