ஏற்காடு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சேலம் திமுக பொறுப்பாளருக்கு திடீர் ரத்தக் கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஏற்காடு இடைத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்திற்கு திடீரென ரத்தக்கொதிப்பு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சேலம் மாவட்ட திமுக செயலாளராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவைத் தொடர்ந்து அந்த மாவட்டத்தின் கட்சிப் பொறுப்புகளைக் கவனிக்கும் பொறுப்பு சிவலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையி்ல் ஏற்காடு இடைத் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் சிவலிங்கம் ஈடுபட்டுள்ளார். இந்தச் சூழ்நிலையில் அவருக்கு நேற்று நள்ளிரவில் திடீரென ரத்தக் கொதிப்பு அதிகமானது. இதனால் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+