சேலத்தில் 4 வயது சிறுவனை நரபலி கொடுக்க முயற்சி- சிறுவனின் தந்தை உட்பட 4 பேர் கைது!
சேலம்: சேலம் அருகே கோயிலில் 4 வயது சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சிறுவனின் தந்தை உள்பட 4 பேரை மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்து உள்ள கோனகாபாடி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த கிராமத்தின் மத்தியில் பெரியாண்டிச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து நேற்று நள்ளிரவு ஒரு சிறுவனின் கதறல் சத்தம் கேட்டது. இதையடுத்து கிராம மக்கள், கோயிலுக்கு சென்று பார்த்தனர்.
கோயில் முன்புள்ள வேல் கம்பில் 4 வயது சிறுவனை ஒருவர் குத்த முயன்றதை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மக்களை கண்டதும், அந்த நபரும், உடன் வந்த பெண் உள்பட 3 பேரும் ஓட்டம் பிடித்தனர்.
மக்கள் சுதாரித்துக் கொண்டு விடாமல் துரத்தி சென்று அனைவரையும் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து தாரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவனின் தந்தையே அவனை நரபலி கொடுக்க வந்தது தெரியவந்துள்ளது. அதனையடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications