குளிக்கும் போது பெண்ணை தவறாக படமெடுத்து மிரட்டல்- ஓமலூர் வாலிபர் கைது
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரில் குளிக்கும் போது பெண்ணை தவறாக வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி குண்டூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் செம்மாண்டப்பட்டியில் உள்ள லேத் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த இளம்பெண் கடந்த இரு நாளுக்கு முன்பு தனது குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார்.

வீட்டுக்கு வெளியில் இருந்த அந்த குளியலறைக்கு மேற்கூரை இல்லை. இதை பயன்படுத்தி கிருஷ்ணன் தனது மாடி வீட்டிலிருந்து குளித்துக்கொண்டிருந்த அப்பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்துள்ளார். பின்னர் அந்த ஆபாச படத்தை அந்த பெண்ணிடம் காட்டி எனது ஆசைக்கு சம்மதிக்கவில்லை என்றால் ஆடை இல்லாமல் இருக்கும் உன்னுடைய ஆபாச படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து தனது கணவனிடம் கூறி அழுது உள்ளார். இதையாடுத்து அந்த பெண்ணின் கணவர் தீவட்டிப்பட்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்கு அப்திவு செய்துள்ள இன்ஸ்பெக்டர் கந்தசாமி கிருஷ்ணனிடமிருந்த ஆபாச வீடியோவை பறிமுதல் செய்தார். பின்னர் அவரை கைது செய்து ஓமலூர் குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications