காலக் கொடுமை... டூவீலர்கள் திருடிய 12, 17 வயது 4 சிறுவர்கள் கைது!
சேலம்: சேலத்தில் இரு சக்கர வாகனங்கள் திருடிய 4 சிறுவர்கள் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர்.
சேலம் நகரிலுள்ள நெத்திமேடு காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் தன் வீட்டின் முன் நிறுத்திவைத்திருந்த இரு சக்கர வாகனம் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனது.
இதேபோல, செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த தண்டாயுதபாணி சனிக்கிழமை அன்னதானப்பட்டியில் உள்ள ஒரு தேநீர்க் கடை முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று, திரும்பி வந்துபோது அவரது வாகனம் திருடப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், சந்தேகப்படும் வகையில் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த 4 சிறுவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
12 முதல் 17 வயது வரை உள்ள அந்த 4 சிறுவர்களும் அந்தப் பகுதியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியது தெரியவந்தது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் நால்வரும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
மேலும், அவர்களிடமிருந்து திருடப்பட்ட இரண்டு இரு சக்கர வாகனங்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications