For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புகார் தர வந்த பெண்ணை கரெக்ட் செய்த எஸ்.ஐ.. கண்டித்த கணவரை சிறை வைத்து சித்திரவதை!

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் தகாத உறவு வைத்த சப் இன்ஸ்பெக்டர் கண்டித்த கணவரையும் வீட்டில் சிறை வைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    புகார் கொடுக்க வந்த பெண்ணை கரெக்ட் செய்த எஸ்.ஐ- வீடியோ

    சேலம்: புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் தகாத உறவு வைத்த சப் இன்ஸ்பெக்டர் கண்டித்த கணவரையும் வீட்டில் சிறை வைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மலைவாசன். இவரது மனைவி மணிமேகலை. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    Salem Police Sub inspector got illegal relationship with a woman

    இதனால் ஆத்திரமடைந்த மணிமேகலை தனது கணவர் குறித்து அவ்வப்போது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றுள்ளார். அப்போது மணிமேகலைக்கும் அங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் கலைசெல்வன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனையறிந்த மலைவாசன், இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் கடுப்பான சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், மலைவாசனை கடுமையாக தாக்கி வீட்டிலேயே சிறை வைத்துள்ளார். இதனையடுத்து ஜன்னல் வழியாக கத்தி கூச்சலிட்டு உதவி கேட்டுள்ளார் மலை வாசன், இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது குறித்து மலைவாசன் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
    கணவன் -மனைவியிடையே ஏற்பட்ட தகராறை பயன்படுத்தி, புகார் கொடுக்க வந்த பெண்ணையும் ஆசை வார்த்தை கூறி வளைத்த சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    Salem Police Sub inspector got illegal relationship with a woman who comes to complaint against her husband.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X