IPS பாத்துருப்பீங்க... ஏன் UPS கூட பாத்திருப்பீங்க... ஆனா KPS பாத்துருக்கீங்களா??
ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூரில் ஒரு வித்தியாசமான சங்கம் திறந்துள்ளனர். அது காதலைப் பிரிப்போர் சங்கமாகும்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாணியில் இந்த காதலைப் பிரிப்போர் சங்கத்தை திறந்துள்ளனர் அங்குள்ள சில குசும்புக்கார இளைஞர்கள்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கொங்குப்பட்டி மணியக்காரணூர் பகுதியில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து காதலை பிரிப்போர் சங்கம் என்று பிளக்ஸ்பேனர் வைத்து உள்ளனர். இந்த சங்கத்திற்கு தலைவர், செயலாளர், பொருளாளர் என்று பொறுப்புகள் வழங்கி உள்ளனர்.

பிரபு என்பவர் தலைவராகவும், சந்தோஷ் செயலாளராகவும், துணைத் தலைவர் உதயா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்ற உறுப்பினர்களாக 7 பேர் உள்ளனர். மொத்தம் 13 பேர் இருப்பதாக தெரிகிறது. இந்த சங்கத்தின் கொள்கை என்ன என்று தெரியவில்லை. ஆனால் அந்த பிளக்ஸ் பேனறில், ஊர்ல தப்பு நடக்கனும்.. ஆனா அதை நாங்க மட்டும்தான் பண்ணனும் என்று பன்ச் வைத்துள்ளனர்.
மேலும் வேணாம் மச்சான் சேட்டை, இது மணியக்காரனூர் கோட்டை என்றும் கூறியுள்ளனர். வாட்ஸ் ஆப்பிலும், பேஸ்புக்கிலும் இப்போது இவர்களைப் பற்றியப் பேச்சாக உள்ளது.
என்னத்தச் சொல்றதுன்னு தெரியலையே!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications