For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிராவல் மண் அள்ளியதில் ரூ. 220 கோடி முறைகேடு... மணல் குவாரி அதிபர் படிக்காசு கைது

Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கையைச் சேர்ந்த பிரபல மணல் குவாரி அதிபரான படிக்காசு என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ரூ. 220 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் கிராவல் மண், கிரானைட் ஆகியவற்றை எடுத்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Sand quarry baron Padikkasu arrested

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரிகளை நடத்தி வருபவர் படிக்காசு. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த இவர் மீது, முறைகேடாக கிராவல் மண் அள்ளியதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, படிக்காசை கைது செய்ய டி.எஸ்.பி. பஞ்சாட்சரம் தலைமையில் தனிப்படை அமைத்தது.

இந்தநிலையில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் இருந்த படிக்காசை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவருடன், நாகூர் அனீபா, சோலை ராஜா, மோகன், ஜெயராமன் ஆகிய 4 பேரும் கைதானார்கள்.

English summary
Sivagangai police have arrested noted sand quarry baron Padikkasu at Usilampatti. 4more have been arrested with him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X