For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிர்மலா தேவி விவகாரம்.. சந்தானம் கமிஷனின் 3 கட்ட விசாரணை நிறைவடைந்தது.. அறிக்கை எப்போது தெரியுமா?

நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் கமிஷன் விசாரணை நிறைவடைந்துள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் கமிஷன் விசாரணை நிறைவடைந்துள்ளது.

புதுக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

Santhanam commission completes investigation in the professor Nirmala Devi issue

இந்த குழு நிர்மலா தேவி உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் விசாரணை அதிகாரி சந்தானம் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது
நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை நிறைவடைந்துள்ளது என அவர் கூறினார்.

திட்டமிட்டப்படி மே 15ம் தேதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். தமிழில் உள்ள விசாரணை அறிக்கையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணி தொடங்க இருப்பதாகவும் சந்தானம் கூறினார்.

ஏப்ரல் 19ம் தேதி துவங்கி 3 கட்ட விசாரணைகளை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சந்தானம் நிறைவு செய்துள்ளார்.

English summary
Santhanam commission complets investigation in the professor Nirmala Devi Audio issue. Investigation report will be submmited on May 15th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X