கால் பக்கம் விளம்பரம் கொடுத்து விட்டு... குற்றாலம் சாரல் விழாவை புறக்கணித்த சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

குற்றாலம்: அனைத்து நாளிதழ்களிலும் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு கால் பக்க அளவுக்கு விளம்பரம் கொடுத்து விட்டு, குற்றாலத்தில் நேற்று தொடங்கிய சாரல் விழாவுக்கு தென்காசி தொகுதி எம்.எல்.ஏவும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் வராமல் போனது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் துவங்கி மூன்று மாதங்களுக்கு குளுகுளு சீசன் நிலவும். இதையொட்டி சுற்றுலா துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக சாரல் திருவிழா நடத்தப்படுகிறது. குற்றாலம் கலைவாணர் அரங்கில் சாரல் விழா நேற்று இரவு துவங்கியது.

Sarath Kumar absent Courtallam saral vizha

தமிழக இந்து அறநிலையத்துறை செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன் விழாவை துவக்கி வைத்தார். கலெக்டர் கருணாகரன், எம்.பி.,க்கள் விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், பிரபாகரன், வசந்திமுருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி எம்.எல்.ஏ.வா சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பங்கேற்கவில்லை. தொகுதியில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்த காரணம் என்ன என்று அனைவரும் குழம்பி போய் உள்ளனர்.

அதே சமயம் அனைத்து நாளிதழ்களிலும் அவர் கால் பக்கம் சாரல் விழாவுக்கு முதல்வர் படம் போட்டு விளம்பரம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+