காலை 10 மணி முதல் ராத்திரி 10 மணி வரை.. சந்து சந்தாக அதிமுகவுக்காக சரத்குமார் பிரசாரம்!
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் பிரசாரத்தில் குதித்து விட்டார். இன்று முதல் அவர் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.
இதுவரை பிரசாரம் செய்து வரும் எந்த ஒரு தலைவரும் மக்களை வசீகரிக்கவில்லை. திரும்பத் திரும்ப ஒரே மாதிரியே அத்தனை பேரும் பேசி வருவதாலும், பேச்சுத் திறமை இல்லாததாலும், பேச்சில் ஒரு சத்தும், சாரமும் இல்லாததாலும் மக்கள் கடுப்பாகியுள்ளனர்.
இந்த நிலையில் மைக் போட்டு பேசும் கூட்டத்தில் சரத்குமாரும் இன்று முதல் இணைந்துள்ளார்.

இன்று அவர் சென்னையில் அவர் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவரது கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை...
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
காலை 10 மணிக்கு திருவான்மியூர் மார்க்கெட் அருகே பிரசாரத்தை தொடங்கி, பெருங்குடி ஆதிபராசக்தி மண்டபம் அருகில், தரமணி பஸ் ஸ்டான்ட், வேளச்சேரி காந்தி ரோடு, மேடவாக்கம் பஸ் ஸ்டான்ட், பி.டி.சி. காலனி, கண்ணகிநகர், நீலாங்கரை - சர்ச், பாலவாக்கம் பெரியார் சாலை வரை காலை பிரசாரத்தை முடிக்கிறார்.
அதன் பின்னர், மவுலிவாக்கம் பாய்க்கடை, குன்றத்தூர் தேரடி, அனகாபுத்தூர் பஸ் ஸ்டான்ட், பம்மல் பஸ் ஸ்டான்ட், பல்லாவரம் மார்க்கெட், குரோம்பேட்டை - ராதாநகர் தாம்பரம் மார்க்கெட் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.
முடிவில் ஆலந்தூரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications