காவிரி மேலாண்மை வாரியம்.. சரத்குமார் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் வேண்டி சரத்குமார் கட்சி சார்பில் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்ககோரியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுவருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தமிழகத்தில் விவசாய அமைப்புகள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கும் நிலையில், மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.
இதில் பேசிய சரத்குமார், மத்திய அரசு தமிழக அரசை தொடர்ந்து வஞ்சிக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசியல் பாகுபாடுகளை மறந்து போராட வேண்டியுள்ளது.
காவிரி என்பது தமிழர் உரிமை எனவே, அதை பாதுகாக்க அரசியல் களைந்து தமிழர் என்கிற இன உணர்வோடு ஒவ்வொருவரும் போராடவேண்டும். தமிழக மக்களின் மனவோட்டத்தை மத்திய அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

அதற்காகவே சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இந்தப் போராட்டம் துவங்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சரத்குமாரின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் ஆதரவு அளித்துள்ளனர். மேலும், இந்த போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications