நேற்று கூட வைகோ சாக்கடைக் கழிவுகளை அகற்றினார்.. சரத்குமார் என்ன செஞ்சாரு...?
நெல்லை: மக்கள் நல கூட்டியக்கம் என்று இருக்கிறதா என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், தென்காசி எம்.எல்.ஏவுமான சரத்குமார் கேட்டுள்ளார். ஆனால் அவரது பேச்சுக்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை என்பதுதான் விசேஷமானது.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூ்ட்டத்தில் கலந்து கொண்ட சரத்குமார் பேசுகையில், 24 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இயற்கை சீற்றம் சென்னையை பரட்டி போட்டுள்ளது. விவசாய நிலங்கள் முற்றிலும் அழிந்துள்ளது.

வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளை கடனை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். ச.ம.க. அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறோம். இது போல் சிங்கபூர், மலேசியா, துபாய் போன்ற இடங்களில் உள்ள எனது நண்ர்பர்கள் மூலம் 10 டன் எடையுள்ள நிவாரண பொருட்கள் வர இருக்கின்றன.
ஏற்கனவே செஞ்சிலுவை சங்கம் மூலம் நிவாரண பொருட்களை வினியோகம் செய்துள்ளோம். மாலை மட்டும் 3500 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளோம்.
செம்பரம்பாக்கம் ஏரியி்ல் தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து நீதி விசாரணை தேவையில்லை. இயற்கை பேரிடரை வைத்து அரசியல் செய்வதை விட்டு விட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தனது பேச்சின் இறுதியில், மக்கள் நல கூட்டியக்கம் என்பது இருப்பது போல் தெரியவில்லை. அப்படி ஓன்று இருக்கிறதா என கிண்டலாக கேட்டார் சரத்குமார். இது அங்கு இருந்த பொதுமக்களிடம் கோபத்தை உண்டு பன்னியது. இதுவரை எட்டி பார்க்காத ச.ம.க. இப்போது மட்டும் எப்படி வந்தது என அவர்கள் தங்களுக்குள் கேள்வி எழுப்பியபடி கலைந்து சென்றதை பார்க்க முடிந்தது.
சென்னையில் நேற்று கூட மக்கள் நலக் கூட்டியக்கத் தலைவர்கள் பலர் சாக்கடைக் கழிவுகளை முகம் சுளிக்காமல் பார்க்க முடிந்தது. சரத்குமார் கட்சியினர் எத்தனை சாக்கடையில் அடைப்பு எடுத்து விட்டனர் என்றுதான் தெரியவில்லை!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications