ஆர்.கே.நகரில் ஜெ. வை எதிர்த்து மருமகள் சிம்லா முத்துசோழனை களமிறக்கிய சற்குணபாண்டியன்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் ஆர்.கே. நகரில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துசோழன் இன்று மரணம் அடைந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியனின் மருமகள் ஆவார்.
தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து அந்த தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து யார் நிற்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.
அதிலும் குறிப்பாக திமுக யாரை நிறுத்தப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

சிம்லா முத்துசோழன்
ஜெயலலிதா என்ற பெரிய சக்தியை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.கே. நகரில் நிறுத்தப்பட்டவர் திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துசோழன். திமுக வழக்கறிஞர் அணியில் இருப்பவர்.

மாமியாரிடம் வாழ்த்து
திமுக தன்னை வேட்பாளராக அறிவித்ததும் தனது மாமியாரிடம் ஆசி வாங்கிவிட்டு பிரச்சாரத்திற்கு கிளம்பினார் சிம்லா. பெரிய வாகனங்கள் செல்ல முடியாத தெருக்களில் ஸ்கூட்டி ஓட்டிச் சென்று வாக்கு சேகரித்தார்.

தோல்வி
ஜெயலலிதா 96 ஆயிரத்து 269 வாக்குகள் பெற்று ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துசோழனுக்கு 56 ஆயிரத்து 732 வாக்குகள் கிடைத்தது. இதன் மூலம், 39 ஆயிரத்து 537 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

சற்குண பாண்டியன்
சிம்லா முத்துசோழன் போட்டியிட்டு தோல்வி அடைந்த அதே ஆர்.கே. நகர் தொகுதியில் 1989, 1996-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர் சற்குண பாண்டியன். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று மரணம் அடைந்தார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications