அதிருப்தியாளர்களை சமாளிக்கிறாராம் சசி- செங்கோட்டையன் உள்ளிட்டோருக்கு கட்சி பதவி!
அதிமுக அமைப்புச் செயலர்களாக செங்கோட்டையன், சைதை துரைசாமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: அதிமுகவில் தமக்கு எதிராக இருக்கும் அதிருப்தியாளர்களுக்கு கட்சி பதவி கொடுத்து சமாதானப்படுத்தியுள்ளார் சசிகலா. அதிமுக அமைப்புச் செயலர்களாக கே.ஏ.செங்கோட்டையன், சைதை துரைசாமி, கோகுல இந்திரா, கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவின் பொதுச்செயலர் பதவியை சசிகலா கபளீகரம் செய்ய முயற்சித்தபோது அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அப்போது அதிருப்தியாளர்களுக்கு ஆட்சியிலும் கட்சியிலும் பதவி வழங்கப்படும் என மன்னார்குடி தரப்பு உறுதியளித்திருந்தது.

தற்போது முதல்வர் நாற்காலியில் அமருவதற்கும் மும்முரமாக இருக்கிறார் சசிகலா. இந்த நிலையில் திடீரென சசிகலா தலைமையை ஏற்க மறுத்து ஒதுங்கி இருந்த பலருக்கும் திடீரென கட்சி பதவிகளை அள்ளிக் கொடுத்துள்ளார் சசிகலா.
அதிமுகவின் புதிய அமைப்புச் செயலாளர்களாக கே.ஏ. செங்கோட்டையன், சைதை துரைசாமி, கோகுல இந்திரா, கருப்பசாமி பாண்டியன், சோமசுந்தரம், வரகூர் அருணாசலம், நரசிம்மன், நிறைகுளத்தான். அன்பழகன் அண்ணாமலை, உமாதேவன், புத்திசந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக மீனவர் பிரிவு செயலராக அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications