• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்மை கதறவிட்டவர்களை 11 நாளில் பதற வைப்பேன்... சசிகலாவின் பரோல் சபதம்!

|
  11 நாளில் பதற வைப்பேன்! சசி சபதம்!

  தஞ்சாவூர்: சசிகலாவின் பரோல் விடுப்பு முடிவதற்கு இன்னும் 11 நாட்கள் இருக்கின்றன. நடராஜன் உடல் அடக்கம் முடிந்த அன்று இரவில் இருந்தே பஞ்சாயத்துகள் தொடங்கிவிட்டன என்கின்றனர் குடும்ப கோஷ்டிகள். ' அதிகாரத்தில் உள்ளவர்களை அசைக்கும்விதமாக அடுத்து வரும் நாட்களை பயன்படுத்திக் கொள்ள இருக்கிறார் சசிகலா' என்கின்றனர் அவர்கள்.

  நடராஜனின் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காகக் கடந்த 20-ம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா. முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உடல் அடக்கம் முடிந்த பிறகு, அன்று இரவு மட்டும் அமைதியாக இருந்தார். ஆனால் அடுத்த நாள் காலை முதலே பஞ்சாயத்துகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. நடராஜன் வாங்கிப் போட்ட சொத்துக்கள், அவைகளை முறைப்படி மாற்றவது உள்பட சொத்து விவகாரம் குறித்து தீவிர விவாதம் நடந்து வருகிறது.

  மறுபுறம், ஆறுதல் சொல்ல வருகிறவர்களிடம் சோகமான முகத்தோடு பேசி வருகிறார் சசிகலா. தமிழ் ஆர்வலர்களின் வருகைதான் அதிகமாக இருக்கின்றன. 'அண்ணனைப் போல ஒரு போராளியைப் பார்க்க முடியாது. தமிழ்த் தேசியத்துக்காக அவர் செய்த பணிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது' எனக் கூறும் வார்த்தைகளையெல்லாம் ஆமோதித்துக் கேட்டுக் கொள்கிறார்.

  அதேநேரம், தனிக்கட்சியின் விளைவுளைப் பற்றியும் திவாகரன் உள்ளிட்ட குடும்ப உறவுகள் பேசி வருகின்றனர். சசிகலாவின் மௌனம்தான் திவாகரன் உள்ளிட்டவர்களின் கோபத்துக்குக் காரணமாகிவிட்டது.

  தினகரன் மீது புகார் பட்டியல்

  தினகரன் மீது புகார் பட்டியல்

  'டெல்லியே நம்முடைய பேச்சைக் கேட்கத் தயாராக இருக்கிறது. அதற்கான முயற்சிகளை எடுக்காமல், 'மோடியை எதிர்த்தால் வெற்றி பெறுவோம்' எனப் பேசுவதெல்லாம் சரியல்ல. உங்களிடம் ஒன்றைப் பேசிவிட்டு, வெளியில் வேறு மாதிரி நடந்து கொள்கிறார் தினகரன். யாருடைய ஆலோசனைகளையும் அவர் கேட்பதில்லை. அவர் நினைத்ததைச் செய்கிறார். இத்தனை காலமாக பாடுபட்ட எங்களையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டுச் செயல்படுவது நல்லதல்ல.

  அதிகாரம் மீண்டும் கைக்கு வரும்

  அதிகாரம் மீண்டும் கைக்கு வரும்

  தனிக்கட்சி குறித்து தினகரன் யாரிடம் விவாதித்தார்? அவருடைய முயற்சியால் ஒட்டிக் கொண்டிருப்பவர்களும் வெட்டிவிட முடிவு செய்துவிட்டார்கள். உறுதியான நிலைப்பாட்டை எடுங்கள்' எனப் பேசியுள்ளனர். இதனை சசிகலாவும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து தன்னை சந்திக்க வருபவர்களிடம், ' நம்மிடம் கும்பிடு போட்டுவிட்டு பதவியில் உட்கார்ந்தவர்கள் எல்லாம் நமக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எத்தனை நாட்கள் பேசப் போகிறார்கள் என்று பார்க்கிறேன். நான் நினைத்தால் ஒரேநாளில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும். அங்கிருக்கும் பலரும் உள்ளுக்குள் புழுங்கியபடிதான் இருக்கிறார்கள். பரோல் முடிவதற்குள் நான் யார் என்பதைக் காட்டாமல் விடமாட்டேன். என் கையைவிட்டுப் போன அதிகாரம், என் கைக்கே மீண்டும் வரும். அதனை நீங்கள் எல்லாம் பார்க்கத்தான் போகிறீர்கள்' என முகத்தை உக்கிரமாக வைத்துக் கொண்டு பேசியிருக்கிறார்.

  குடும்பத்தினருக்கு சசி போட்ட உத்தரவு

  குடும்பத்தினருக்கு சசி போட்ட உத்தரவு

  இதற்குக் காரணம், நடராஜன் மரணம் குறித்து அ.தி.மு.க தரப்பில் சிலர் பேசியதுதான் காரணம். கூடவே, குடும்ப உறுப்பினர்களின் அழுத்தமும் ஒன்று சேர்ந்துவிட்டது. இதையடுத்து, தினகரனுக்கும் குடும்ப ஆட்களுக்கும் சில உத்தரவுகளைப் போட்டிருக்கிறார். ' பரோல் முடிவதற்குள் அ.தி.மு.கவில் இருந்து கணிசமான எம்.எல்.ஏக்கள் தன்னை வந்து பார்ப்பார்கள்' என நம்புகிறாராம் சசிகலா. இளவரசியின் வாரிசுகள் மீதுதான் திவாகரன் உள்ளிட்ட சிலர் கடும் கோபத்தில் உள்ளனர்.

  திவாகரன் கோபம்

  திவாகரன் கோபம்

  இவர்களை விலக்கிவைக்காமல், அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை அவர்கள் ரசிக்கவில்லை. தனிக்கட்சி தொடக்கவிழாவில் விவேக்கின் ஆதிக்கத்தைப் பார்த்த பிறகுதான், திவாகரன் தரப்பினரின் கோபம் அதிகமானது. இதன் எதிரொலியாகத்தான் ஜெயானந்த், தனிக்கட்சி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. 'யார் எதிரி? யார் நண்பன் என்பதைக் கூட தினகரன் உணரவில்லை. இதேநிலை நீடித்தால், நாங்கள் வேறு மாதிரியான முடிவுகளை எடுக்க நேரிடும்' என சசிகலாவிடம் திவாகரன் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் சொல்கின்றனர் தஞ்சையில் உள்ள சசிகலா ஆதரவாளர்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  தஞ்சாவூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
  வருடம்
  வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
  2019
  பழனிமாணிக்கம் திமுக வென்றவர் 5,88,978 56% 3,68,129
  Natarajan.n.r டி எம் சி ( எம்) தோற்றவர் 2,20,849 21% 3,68,129
  2014
  பரசுராமன் .கெ அஇஅதிமுக வென்றவர் 5,10,307 51% 1,44,119
  பாலு டி.ஆர் திமுக தோற்றவர் 3,66,188 37% 0
  2009
  பழனிமாணிக்கம் எஸ்.எஸ் திமுக வென்றவர் 4,08,343 51% 1,01,787
  துரை. பாலகிருஷ்ணன் மதிமுக தோற்றவர் 3,06,556 38% 0
  2004
  பழனிமாணிக்கம் எஸ்.எஸ் திமுக வென்றவர் 4,00,986 57% 1,19,148
  தங்கமுத்து கெ அஇஅதிமுக தோற்றவர் 2,81,838 40% 0
  1999
  பழனிமாணிக்கம் எஸ்.எஸ் திமுக வென்றவர் 2,95,191 45% 33,014
  தங்கமுத்து கெ அஇஅதிமுக தோற்றவர் 2,62,177 40% 0
  1998
  பழனிமாணிக்கம், எஸ்.எஸ் திமுக வென்றவர் 3,24,344 52% 48,204
  கணேசன், எல். மதிமுக தோற்றவர் 2,76,140 44% 0
  1996
  பழநிமாணிக்கம் எஸ் எஸ் திமுக வென்றவர் 3,90,010 59% 2,00,428
  துளசய்யா வாண்டையர் கெ காங்கிரஸ் தோற்றவர் 1,89,582 29% 0
  1991
  துளசியா வாண்டயர் கெ. காங்கிரஸ் வென்றவர் 3,81,932 61% 1,62,070
  பழனிமாணிக்கம் எஸ் திமுக தோற்றவர் 2,19,862 35% 0
  1989
  சிங்காரவடிவேல், எஸ் காங்கிரஸ் வென்றவர் 3,71,967 56% 97,147
  பழனிமாணிக்கம், எஸ். திமுக தோற்றவர் 2,74,820 42% 0
  1984
  சிங்காரவடிவேல் காங்கிரஸ் வென்றவர் 3,06,351 55% 89,321
  பழனிமாணிக்கம் எஸ் திமுக தோற்றவர் 2,17,030 39% 0
  1980
  சிங்காரவடிவேல் எஸ் ஐஎன்சி(ஐ) வென்றவர் 2,68,382 53% 44,539
  தங்கமுத்து கெ. அஇஅதிமுக தோற்றவர் 2,23,843 44% 0
  1977
  சோமாசுந்தரம் எஸ்.டி. அஇஅதிமுக வென்றவர் 2,89,059 60% 97,743
  கணேசன் எல். திமுக தோற்றவர் 1,91,316 40% 0
  1971
  எஸ்.எஸ். சோமாசுந்தரம் திமுக வென்றவர் 2,68,980 57% 1,00,008
  ஆர். கிருஷ்ணசாமி கோபாலர் என்சிஓ தோற்றவர் 1,68,972 36% 0

   
   
   
  English summary
  Sasikala assured her supporters will solve the issues within Parole period and regain the power within 11 days of Parole ends, because of sasikala's promise supporters were much happier.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more