சசிசகலா, இளவரசி, சுதாகரன்.. 3.6 ஆண்டுகள்தான் ஜெயிலில் இருப்பார்கள்!
சென்னை: சொத்துக் குவிப்பில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் 3.6 ஆண்டுகள் மட்டுமே சிறையில் இருப்பார்கள் எனத் தெரிய வந்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதமும், மற்றவர்களுக்கு தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் உறுதி செய்து அறிவித்தது. இதையடுத்து 3 பேரும் சிறைக்குப் போகிறார்கள். ஆனால் இவர்கள் சிறையில் 4 ஆண்டு காலம் இருக்க மாட்டார்கள். மாறாக 3.6 ஆண்டு காலம் மட்டுமே இருப்பார்கள். காரணம், ஏற்கனவே 6 மாதங்களை அவர்கள் பல்வேறு சமயங்களில் சிறையில் கழித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications