எம்ஜிஆர், ஜெயலலிதாவை வாழ வைத்த ஆண்டிப்பட்டி.. சசிகலாவுக்கு கை கொடுக்குமா?
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கை கொடுத்த ஆண்டிபட்டி சசிகலாவை தேற வைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது தமிழகம்.
சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் தமிழக முதல்வராகும் சசிகலா ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடலாம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கை கொடுத்த சட்டசபை தொகுதி ஆண்டிபட்டி. அதிமுக அதிக முறை வெற்றி பெற்ற தொகுதி இது.

அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படுகிற தொகுதிகளில் இந்த ஆண்டிபட்டியும் ஒன்று. தற்போது முதல்வராகும் சசிகலாவும் ஆண்டிபட்டியில் போட்டியிட திட்டமிட்டு வருகிறாராம்.
அதேநேரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு இருந்த மக்கள் ஆதரவு சசிகலாவுக்கு முழுமையாக இல்லை. அதிமுக தொண்டர்களே கூட சசிகலாவை ஏற்கவில்லை.
ஆண்டிபட்டியில் சொந்த ஜாதி வாக்குகள் அப்படியே சசிகலாவுக்கு கை கொடுக்குமா? என்பதும் கேள்விக்குறி.
பொதுச்செயலர், முதல்வர் பதவியைக் கைப்பற்றியது போல எம்.எல்.ஏ.வாகி விடலாம் என்ற சசிகலாவின் எண்ணத்தை ஆண்டிபட்டி வாக்காளப் பெருமக்கள் நிறைவேற்றித் தருவார்களா? இல்லை பாடம் கற்பிப்பார்களா? என்பதை காண ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications